மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
சிஐஎஸ்சிஈ பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAR 2018 7:24PM by PIB Chennai
2018-ஆம் ஆண்டு முதல் தனது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண்ணை 35 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாகவும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகவும் குறைத்திருப்பதாக இந்திய பள்ளிகள் சான்றிதழ் தேர்வு சபை (சிஐஎஸ்சிஈ) அறிவித்துள்ளது.
மக்களவையில் இன்று (19.03.18) கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு உபேந்திர குஷ்வாகா இத்தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
----
(வெளியீட்டு அடையாள எண்: 1525298)
வருகையாளர் எண்ணிக்கை : 128