உள்துறை அமைச்சகம்

பேரிடர் அபாயக் குறைப்பு பற்றிய முதலாவது இந்தியா-ஜப்பான் பயிலரங்கம் தொடக்கம்

Posted On: 19 MAR 2018 12:13PM by PIB Chennai

பேரிடர் அபாயக் குறைப்பு பற்றிய முதலாவது இந்திய-ஜப்பான் பயிலரங்கை நித்தி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் இன்று (19.03.2018) தொடங்கிவைத்தார்.  இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கிற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும் (NDMA) ஜப்பான் அரசும் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன. 

     நிகழ்ச்சியில் பேசிய நித்தி ஆயோக் துணைத்தலைவர், மிகவும் பழமை வாய்ந்த நாகரீகங்களைக் கொண்ட இந்தியா-ஜப்பான் நாடுகள் இடையே நிலவும் ஒற்றுமையை சுட்டிக்காட்டினார். இருநாடுகளும் அடிக்கடி இயற்கைச் சீற்றங்களுக்கு ஆளாவதாகக் குறிப்பிட்ட அவர், பேரிடர் அபாயத்தை குறைத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இருநாடுகளும் அதிக முதலீடு செய்வதையும் எடுத்துரைத்தார்.  பேரிடர் அபாயக்குறைப்பு தொடர்பாக இருநாடுகளும் செப்டம்பர் 2017-ல் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்ட அம்சங்களை செயல்படுத்துவதன் முறையான தொடக்கமாக இந்தப் பயிலரங்கு திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.



(Release ID: 1525235) Visitor Counter : 78


Read this release in: English , Hindi