குடியரசுத் தலைவர் செயலகம்

புதுமையான கண்டுபிடிப்புகளை தொழில்களாக மாற்றுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர்

Posted On: 19 MAR 2018 1:54PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (19.03.2018) நடைபெற்ற விழாவில், புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர் (FINE) திருவிழாவை தொடங்கிவைத்த குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், காந்திய இளம் தொழில்நுட்பவியல் கண்டுபிடிப்பு விருதுகளையும் வழங்கினார்.

     நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நாட்டின் சுதந்திர தின பவள விழாவை கொண்டாடவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே,   புதிய மற்றும் மேம்பட்ட இந்தியாவை படைப்பதற்கான வளர்ச்சியை நாம் எட்ட வேண்டும் என்றார்.  உள்ளார்ந்த மற்றும் மகிழ்ச்சியான சமுதாயமே இந்த தொலை நோக்கு சிந்தனையின் குறிக்கோள் என்றும், இதற்காக ஒவ்வொரு இந்தியரும் தங்களது திறமையை உணர்வதற்கான வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். புதுமைகளை படைக்க விரும்பும் சமுதாயமே புதுமையான இந்தியாவின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த இலக்கை அடைய புதுமை கலாச்சாரம் ஒரு காரணியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். புதுமைகளை ஏற்படுத்துவதற்கான  ஒவ்வொரு வாய்ப்பையும் புதுப்பிக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

புதுமைகளை அங்கீகரித்து, மதிப்பளித்து அவற்றை வெளிப்படுத்தி, கவுரவிப்பதற்கும், கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கான சூழலை உருவாக்குவதற்குமான தொடக்கமாக, 2018 மார்ச் 19 முதல் 23 ஆம் தேதி வரை, புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர் (FINE) திருவிழாவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகையும், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் தேசிய புதுமை அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

 மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.



(Release ID: 1525146) Visitor Counter : 132


Read this release in: English , Hindi