பிரதமர் அலுவலகம்

வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 17 MAR 2018 1:43PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இன்று புதுதில்லி, புசா வளாகம், ..ஆர்.. விழா மைதானத்தில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் உரையாற்றினார்அவர் கருப்பொருள் அரங்கிற்கும், உலக இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கிற்கும் சென்றார். 25 வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கலையும் அவர் நாட்டினார். கரிம பொருட்களுக்கான இணைய-விற்பனை தளத்தையும் அவர் துவக்கி வைத்தார். அவர் கிரிஷி கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா கிரிஷி ப்ரோத்ஷாஹன் விருதுகளையும் வழங்கினார்.

கூட்டத்தினிரிடையே உரையாற்றிய பிரதமர், இத்தகைய முன்னேற்ற கண்காட்சிகள் புதிய இந்தியாவிற்கான பாதையமைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்றார். புது இந்தியாவின் இரு காவலர்களான விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோரிடம் ஒரே நேரத்தில் பேசுவற்கு இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் அவர். வேளாண்மையில் மாற்றத்தை ஏற்படுத்திட விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாக செயல்பட வேண்டும் என்றார் அவர்.

ஆய்வு காலத்தில், வேளாண்மையில் சாதனைகள் புரிந்ததற்காக விருது பெற்ற மேகாலயா மாநிலத்தை பிரதமர் குறிப்பிட்டு பேசினார்.

விடுதலையடைந்தது முதல், வேளாண்மையில் அவர்கள் புரிந்துள்ள சாதனைகளுக்காக, விவசாயிகளின் உணர்வு மற்றும் கடுமையான உழைப்பை பிரதமர் பாராட்டினார். இன்று, பருப்புவகைகள், வித்துக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் பால் ஆகியவை சாதனையளவில் உற்பத்தியாகின்றன என அவர் தெரிவித்தார். இன்று விவசாயத்தில் பல்வேறு முக்கிய சவால்கள் உள்ளன. அவை விவசாயிகளின் வருவாயை குறைப்பதுடன், அவர்களுக்கு இழப்பையும், செலவினத்தையும் அதிகரித்துள்ளன. இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்காக அரசு முழுமையான அணுகுமுறையுடன் செயல்பட்டு வருகிறது என்றார் அவர். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டும் என்பதே இலக்காகும் என்றார் அவர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முன்னேற்றம் குறித்து பேசிய பிரதமர், இதுவரை 11 கோடிக்கும் அதிகமான மண் வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். யூரியாவிற்கு 100 சதவீதம் வேம்பு பூச்சு தரப்படுவதன் மூலம் உரச் செலவினம் குறைந்துள்ளதுடன், உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா மூலம், காப்பீட்டு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது, காப்பீட்டு தொகைக்கான வரையறை அகற்றப்பட்டுள்ளது மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கேட்பு தொகை அதிகரித்துள்ளது. பிரதம மந்திரி விவசாய சின்சய் யோஜனா, ஒவ்வொரு பண்ணைக்கும் தண்ணீர் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது. நிலுவையிலுள்ள பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக 80,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

பண்ணையிலிருந்து சந்தைக்கு வினியோக முறையை வலுப்படுத்துவதற்கும், நவீன வேளாண் உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் கிசான் சம்படா யோஜனா உதவுகிறது. சமீபத்திய வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஆப்ரேஷன் கிரின்ஸ் (பசுமை திட்டம்), குறிப்பாக தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைகிழங்கு வளர்க்கும் விவசாயிகளுக்கு பயனளிக்கும்.

விவசாயிகளின் நல்வாழ்விற்காக பல்வேறு மாதிரி சட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றை மாநிலங்கள் செயல்படுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

நவீன விதைகள், போதிய மின்வசதி மற்றும் எளிதான சந்தை அணுகல் ஆகியவற்றை விவசாயிகள் பெறுவதை உறுதி செய்வதற்காக அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.

அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கான, குறைந்தபட்ச உறுதியான விலை, செலவினத்தின் ஒன்றரை மடங்காக இருக்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்றார் அவர். இந்நோக்கத்திற்காக, கூலி, இயந்திர வாடகை, விதைகள் மற்றும் உரங்களின் விலை, மாநில அரசிற்கு அளிக்க வேண்டிய வருவாய், மூலதன முதலீட்டின் மீதான வட்டி மற்றும் குத்தகை நிலத்திற்கான வாடகை போன்ற கூறுகள் செலவினத்தில் சேர்க்கப்படும்.

வேளாண் விற்பனை சீர்திருத்தங்களுக்காக விரிவான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். ஊரக சில்லறை சந்தைகளை, ஒட்டுமொத்த மற்றும் உலகளாவிய சந்தைகளுடன் இணைப்பது இன்றியமையாததாகும். சமீபத்திய மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில், கிராம சில்லறை விவசாய சந்தைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 22,000 கிராமச் சந்தைகளில்  தேவையான உட்கட்டமைப்பு உயர்த்தப்பட்டு, .பி.எம்.சி மற்றும் இ-என்..எம். தளங்களுடன் ஒருங்கிணைக்கப்படும்.

விவசாயி உற்பத்தியாளர் சங்கங்களின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார். கூட்டுறவு சங்கங்களை போல, விவசாயி உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும் என்றார் அவர். கரிம பொருட்களுக்கான இணைய-விற்பனை தளத்தின் மூலம், இத்திட்டத்தில் விவசாய விற்பனை சீர்திருத்தத்தில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது என்றார்.

பசுமை புரட்சி மற்றும் வெண்மை புரட்சியை போன்று, கரிம புரட்சி, நீர் புரட்சி, நீல புரட்சி மற்றும் இனிப்பு புரட்சிக்கும் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.

இது தொடர்பாக, வேளாண் விஞ்ஞான மையங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என அவர் கூறினார்.

தேனி-வளர்ப்பு எவ்வாறு விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் ஆதாரமாக விளங்கும் என்பதை பிரதமர் விளக்கினார். அதே போன்று, சூரியயியல் பண்ணை நன்மைகள் குறித்தும் அவர் பேசினார். கடந்த மூன்றாண்டுகளில் 2.75 சூரிய மின்சார நீர் இறைக்கும் பம்புகள் விவசாயிகளை அடைந்துள்ளது என்றார் அவர். மேலும், உயிரி-கழிவிலிருந்து உரம், உயிரி-எரிவாயு உருவாக்கும் கோ-பர் தன் யோஜனா குறித்தும் அவர் பேசினார்.

பயிர் எச்சங்களை எரிப்பது தீமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற பிரதமர், பயிர் எச்சங்களை இயந்திரங்கள் மூலம் மீண்டும் நிலத்திற்கே திருப்பியளிப்பது, நன்மை தரும் பயன்களை அளிக்கும் என்றார்.

போதிய விவசாய கடன் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதற்காக அரசு செயலாற்றி வருவதாக பிரதமர் கூறினார்.

இத்தகைய நிகழ்வுகள் தொலை-தூர பகுதிகளில் நடத்தப்பட வேண்டும் என்றார். இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.

*****



(Release ID: 1524997) Visitor Counter : 271


Read this release in: English , Hindi , Assamese