ரெயில்வே அமைச்சகம்

ரயில்களில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான உயிரி டாய்லெட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 16 MAR 2018 4:53PM by PIB Chennai

2015-16, 2016-17, 2017-18 ஆண்டுகளில் (2018 பிப்ரவரி வரை) இந்திய ரயில்வேயில் ரயில் பெட்டிகளில் 1,00,663 உயிரி டாய்லெட்டுகள் பொருத்தப்பட்டன. இது இதற்கான இலக்கான 87,000 உயிரி டாய்லெட்டுகள் என்பதை விஞ்சியுள்ளது.

     மண்டல ரயில்வேகள் உயிரி டாய்லெட்டுகள் பொருத்தும் போது பெற்ற செலவினம் விவரம் வருமாறு:

 

ஆண்டு

2015-16

2016-17

2017-18

மொத்தம்

பெற்ற செலவினம்

63.2

234.74

216.03

513.97

 

மேலும் உற்பத்தி பிரிவுகளில் புதிய பெட்டிகளில் உயிரி டாய்லெட்டுகள் பொருத்துவதற்கான செலவின விவரம் வருமாறு:

 

ஆண்டு

2015-16

2016-17

2017-18

மொத்தம்

பெற்ற செலவினம்

90.1

91.8

99.8

281.7

                மாநிலங்களவையில் இன்று (16.03.2018) கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே இணையமைச்சர் திரு ராஜென் கோஹைன் இத்தகவலைத் தெரிவித்தார்.


(रिलीज़ आईडी: 1524975) आगंतुक पटल : 95
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English