மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
சர்வ சிக்ஷா அபியான் மற்றும் சக்ஷார் பாரத் திட்ட சாதனைகள்
Posted On:
15 MAR 2018 5:17PM by PIB Chennai
சர்வ சிக்ஷா அபியான் அமலாக்கத்தின் போது ஆரம்பப் பள்ளிகளில் மொத்த மாணவர் சேர்க்கை 2009-10-ல் 18.79 கோடியிலிருந்து, 2015-16-ல் 19.67 கோடியாக உயர்ந்தது. 2015-16 யூடிஐசிஈ-யின் படி, மொத்த மாணவர் சேர்க்கை விகிதாச்சாரம் (ஜிஈஆர்) 99.2 சதவீதம் ஆரம்பப் பள்ளிகளிலும், 92.81 சதவீதம் நடுநிலை பள்ளிகளிலும் இருந்தது.
எழுத்தறிவு வீதத்தை உயர்த்துவதற்கு சக்ஷார் பாரத் என்ற மத்திய அரசு உதவி பெறும் திட்டம், 26 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் ஆகியவற்றைச் சேர்ந்த 410 மாவட்டங்களில் கிராமப் பகுதிகளில் வயது வந்தோர் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு செயல்படுத்தப்படுகிறது. 2001ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுக்கின்படி, இந்த மாவட்டங்கள் வயது வந்த பெண்கள் எழுத்தறிவு வீதத்தில் 50 அல்லது அதற்கு குறைவான சதவீத அளவில் இருந்தனர். இதில் இடதுசாரி தீவிரவாதம் பாதித்த மாவட்டங்கள், அவற்றின் எழுத்தறிவு வீத அளவை கணக்கில் கொள்ளாமல் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இந்தத் திட்டத்தில் பெண்களுக்கும், இதர வாய்ப்பு வசதிகளற்ற குழுவினருக்கும் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று (15,03,2018) கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு உபேந்திர குஷ்வாகா இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும்
*****
(Release ID: 1524773)