உள்துறை அமைச்சகம்

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம், தனது 33-வது நிறுவன தினத்தில் “குடிமக்கள் சேவைகள்” செயலி வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAR 2018 7:28PM by PIB Chennai

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம், தனது 33-வது நிறுவன தினக் கொண்டாட்டத்தில்  “குடிமக்கள் சேவைகள்” என்ற கைபேசி செயலியை வெளியிட்டுள்ளது.

இந்தச் செயலி காவல் துறை சார்ந்த ஒன்பது பணிகளை கொண்டது. இது காவல் துறை மற்றும் பொதுமக்கள் இடையே ஒரு சுமுகமாக உறவை ஏற்படுத்தும்.

இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் புகார் பதிவு செய்வதோடு,  தங்களது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதா, அதன் தற்போதைய நிலை என்ன?, முதல் தகவல் அறிக்கை விவரங்கள், பாதுகாப்பாக வசித்தல், காவல் நிலையங்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்வது, வாகன் சமான்வே, அவசர காலத்தில் தொடர்பு கொள்வதற்கான பெயர் விவரங்கள் மற்றும் காவல் நிலையங்களின் தொலைபேசி எண்கள் பற்றிய குறிப்பேடுகளையும் இந்தச் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

மேலும் விவரங்களை www.pib.nic.in இணையதளத்தில் காணவும்.

****


(வெளியீட்டு அடையாள எண்: 1524526) வருகையாளர் எண்ணிக்கை : 171
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu