குடியரசுத் தலைவர் செயலகம்

மொரிஷியஸில் உள்ள இந்திய ஹைகமிஷனர் அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார்

Posted On: 13 MAR 2018 7:13PM by PIB Chennai
  1. இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியாவின் நண்பர்கள் கூடியுள்ள இந்த சிறப்பான கூட்டத்தில் பங்கேற்பதில் நான் பெருத்த மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடன் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி சவ்பே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் கொண்ட குழு வந்துள்ளது. உங்களது அழகிய நாட்டின் எங்களை சிறப்பாக உணரும்படி கவுரப்படுத்தி உள்ளீர்கள். என்னையும் எனது குழுவினரையும் மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் வரவேற்றுள்ளீர்கள். நான் மொரீஷியஸ் நாட்டிற்கு வந்து இறங்கிய தருணத்திலிருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் எமது தொன்மையான தொடர்புகள்,  குடும்ப உறவுகள் ஆகியவற்றின் அன்பையும், நல்லெண்ணத்தையும் உணர்ந்து வருகிறேன். இந்த அன்புக்காக நான் உண்மையில் கடமைப்பட்டுள்ளேன்.

 

  1. நேற்று (13.2018) மொரீஷியஸின் 50-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் கவுரவம் எனக்கு கிடைத்தது. இந்த வண்ணமிகு நிகழ்ச்சியை முழு மனதுடன் ரசித்தேன். இந்தக் கொண்டாட்டங்களில் காணப்பட்ட உயரிய கவுரவமும், எளிமையும் என்னை வெகுவாக கவர்ந்தன. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி தொடர்பாக மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

 

  1. கடந்த 50 ஆண்டுகளில் மொரீஷியஸ் மக்கள் உயர் தன்னம்பிக்கை மற்றும் வளர்ச்சி கலந்த ஜனநாயக, பன்முக, பல இன சமுதாயத்தை  உருவாக்கியிருக்கிறீர்கள். துடிப்புள்ள இந்த நாட்டின் பொருளாதார சாதனைகள் பாராட்டத்தக்கவை. அனைவரும் அழைக்கும் பூமியில் சொர்க்கத்தை நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள். நெடுநோக்குடைய தலைவர்கள் பாரம்பரியத்தின் ஞானம் மிக்க வழிகாட்டுதலின் கீழ் மொரீஷியஸ் மக்கள் இந்த தீவு நாட்டை இந்தியப் பெருங்கடலின் அமைதி மற்றும் வளமிக்க கலங்கரை விளக்கமாக மாற்றி உள்ளனர்.

 

நண்பர்களே,

 

  1. நாம் இரண்டு நாடுகள் என்றாலும் ஒரே மக்கள். நமக்குப் பொதுவான நாகரீக  வேர்கள் உள்ளன. நாம் வேறு இதர நாடு அல்லது சமுதாயத்தை விட அதிகமானவற்றை பகிர்ந்து கொண்டுள்ளோம்ஃ நமது பாரம்பரியங்கள், வண்ணங்கள், திருவிழாக்கள் அனைத்தும் ஒன்றே. நமது ஊக்குவிப்பு, ஆன்ம பலம் ஆகியவை ஒரே ஆதாரத்தில் இருந்து வந்தவை. நம் இருவருக்கும் மகாத்மா காந்தியடிகள் நிரந்தரமான பெருமையின் ஆதாரம். அவரது செய்தியும், போராட்டமும் தண்டி கடற்கரையில் நின்றுவிடவில்லை, அது மொரீஷியஸின் கடற்கரையை முழு வலுவுடன் அடைந்துள்ளது.

 

  1. நமது தொப்புள்கொடி உறவுகளின் அடையாளமாக விளங்கும் அப்ராவஸி துறைக்கு சென்று அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 16 படிகளில் ஏறும் பெருமை எனக்கு கிடைத்தது. கடந்த சுமார் 200 ஆண்டுகளாக மொரீஷியஸ் மக்கள் எடுத்துக்காட்டியுள்ள தியாகம், வீரம், நம்பிக்கை ஆகியவற்றின் சின்னமாக அது விளங்குகிறது. துறை என்பது இந்தியாவில் சிறப்புக் கட்டத்தைக் கொண்டது. அது நம்மை நமது ஆன்மாவுடனும், உள் மனதுடனும் இணைக்கிறது. அப்ராவஸி துறையில் நான் இருந்தபோது, ஒர் ஆன்மீக யாத்திரையில் இருந்தது போல உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை அது உண்மையான மனதைப் பக்குவப்படுத்தும் அனுபவமாகும்.

 

  1. பல பரம்பரைகளுக்கு முன்னதாக இந்தியாவை விட்டு நீங்கி வந்த எமது சகோதரர்களும், சகோதரிகளும் பெரிய அளவில் சொத்துக்களை அடைந்து ஆன்மீகமும் முன்னேற்றமும் பெற்று அடைந்த  குறிப்பிடத்தக்க வெற்றி குறித்து இந்தியாவில் உள்ள நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எமது நாட்டில் நினைவு தெரிந்த காலம் முதல் ஒன்றாக சேர்ந்து நல்லிணக்கத்துடன் அமைதியான வாழ்க்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்திய வாழக்கையும் சமுதாயமும் மொத்த உலகமும் ஒரு குடும்பம் என்று பொருள்படும். ‘வசுதெய்வ குடும்பகம்என்ற கொள்கை அடிப்படையிலானது. மொரீஷியஸை பொறுத்தவரை இந்தத் தத்துவம் மேலும் அதிகமாக உணரப்படுகிறது. இதனால்தான் நாங்கள் மொரீஷியஸ் மக்களுடன் ரத்தமும் வியர்வையுமாக இணைந்துள்ளோம்.

 

நண்பர்களே,

 

  1. முன் எப்போதும் இருந்ததை விட கூடுதலாக இன்றைய நிலையில் வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் இணைப்புக் கொள்ள நாம் விரும்புகிறோம். அவர்களை ஈடுபடுத்தி தழுவிக்கொள்ள விரும்புகிறோம். இதன் ஊடே ஒருவர் கரத்தை மற்றொருவர் பற்றி பரஸ்பர முன்னேற்றம் மற்றும் வளத்தை நாடுகிறோம். இதனைக் கருத்தில் கொண்டு எமது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு குடியுரிமை (ஒசிஐ) திட்டத்தில் மொரீஷியஸூக்கு சிறப்பு பிரிவை ஏற்படுத்தி உள்ளோம். இன்று இந்திய வம்சாவளியினரின் பெருமை மிகு உறுப்பினர் பதவிக்கு இந்த ஓசிஐ அட்டைகளை வழங்குவதில் எனக்கு பெருத்த மகிழ்ச்சி. இந்த தொன்மையான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
  2.  தில்லியில் நடைபெறவுள்ள பிரவாஸி பாரதிய மைய திட்டத்தில் பங்கேற்க வருமாறு உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். அது இந்தியாவில் உங்களுக்கான வீடு, உங்கள் ஒவ்வொருவரின் இந்திய விலாசம் என்றார் அவர். மொரீஷியஸ் இளைஞர்கள் இந்த மையத்துடன் ஏற்கெனவே தொடர்பு கொள்ள தொடங்கிவிட்டனர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் உலக பிஐஓ நாடாளுமன்ற வாதிகள் மாநாட்டிற்கு உங்கள் நாட்டு நாடாளுமன்றவாதிகள் பலரை வரவேற்று உபசரித்தோம். நாம் நமது இந்திய வம்சாவளியினர் கட்டமைப்பையும் மேடைகளையும் மென்மேலும் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவுடன் இணைப்பை ஏற்படுத்தியும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இதர இந்திய வம்சாவளியினருடன் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும்.

 

நண்பர்களே,

 

  1. இன்று இந்தியாவும் மொரீஷியஸூம் இரண்டு வலுவான ஜனநாயகங்கள் மற்றும் துடிப்பானபல சமய, பல இன சமுதாயங்கள். இதை சமூக நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகிய நெறிகளுக்கானவை. இந்தியாவின் முன்னோக்கிய நடையில் பன்முகத்தன்மை எமது வலுவாகும். மேலும் ஜனநாயகம் இதனை மலர்ச்சி தரச் செய்து வளத்தை அடைய உதவி உள்ளது. ஜனநாயக நெறிகளும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாடும் இன, சமய, இதர வேறுபாடுகளின் இடைவெளியை குறைக்கின்றன. ஜனநாயகங்கள் என்பதால் நாம் பன்முகத்தன்மையையும் நமது வேர்களையும் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

 

நண்பர்களே,

 

  1. இந்தியாவில் எனது அரசின் முதல் நெறி, அனைவருடனும் இணைந்து அனைவருக்கும் முன்னேற்றம் என்று பொருள்படும் சப்கா சாத் சப்கா விகாஸ்என்பதாகும். இந்த முதல் நெறியே மொரீஷியஸ் உடனான எமது மேம்பாட்டு ஒத்துழைப்பின் முக்கிய கொள்கை ஆகும். இங்குள்ள எமது சகோதர, சகோதரிகளுக்கு மொரீஷியஸை வலுவாக நிர்மாணிப்பதற்காக ஆதரவளிக்க விரும்புகிறோம். சாதாரண மக்களின் வாழ்வில் அடிப்படை வசதித் திட்டங்கள் மூலம் மதிப்பு சேர்க்க விரும்புகிறோம். இத்தகயை திட்டங்கள் சிலவற்றை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு நேற்று கிடைத்தது. இந்தத் திட்டங்கள் மொரீஷியஸ் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் மகிழ்ச்சியை கொண்டுவரும் என நம்புகிறேன். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய ஆற்றல் ஆகியவற்றுடன் இணைப்பு ஏற்படுத்துமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் மிகச்சிறப்பான பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளீர்கள். நாம் விரைந்த பொருளாதார வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறோம். நமது பாதைகளுக்காக ஒருவருக்கொருவர் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

 

மேன்மை மிக்கவர்களே, மற்றும் நண்பர்களே,

  1. இந்தியப் பெருங்கடல் நம்மை பல வழிகளில் இணைக்கிறது. அது நம்மிடையே இணைப்புச் சக்தியாக விளங்குகிறது. நிலையான அமைதியான இந்தியப்பெருங்கடல் என்பது இந்தியா மற்றும் மொரீஷியஸ் நலன்களுக்கு மிகவும் தேவையானது. இந்த  நோக்கத்தை அடைய நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

 

  1. இந்தியாவும் மொரீஷியஸூம் ஒருவருக்காக ஒருவர் என்ற நிலையில் உதவி வந்துள்ளன. அப்ராவஸி துறை, போஜ்பூரி, கீத் கவாய் போன்றவற்றுக்கு யுனஸ்கோவின் அங்கீகாரம் பெறும் முயற்சியில் மொரீஷியஸூக்கு உதவுவதில் இந்தியா பெருமைப்படுகிறது. எமது இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் என்ற முறையில் இந்திய சிந்தனை மற்றும் நடைமுறைகளை உலக அரங்குக்கு கொண்டு வர உங்களது தொடர்ந்த முயற்சியை  நாடுகிறோம். இது நன்மைக்கு மட்டுமல்ல. ஆனால் பெரிய அளவு நன்மைக்காக. இந்த நிலையில் யோகா அனைவராலும் போற்றப்படுகிறது.

 

மேன்மை மிக்கோரே, நண்பர்களே, சீமாட்டிகளே, கனவான்களே,

 

  1. மொரீஷியஸ் வாழ் இந்தியர்களுக்கும் அங்குள்ள இந்திய வம்சாவளியினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். வளமான பன்முகத்தன்மை, பண்பாட்டுப்பாரம்பரியம் மற்றும் இதர மரபுகளின் உண்மையான இந்திய எதிரொலியாக நீங்கள் விளங்குகிறீர்கள். உங்களைப் பற்றியும் உங்களது சாதனைகள் குறித்தும் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

 

  1. இந்த வார்த்தைகளுடன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிட்டிட வாழ்த்துகிறேன். வரும் ஆண்டுகளில் மேலும் பல வெற்றிகளையும், வளத்தையும் நீங்கள் அடைவீர்களாக !

 

உங்கள் அனைவருக்கும் நன்றி.



(Release ID: 1524446) Visitor Counter : 330


Read this release in: English , Urdu