சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தில்லி காசநோய் ஒழிப்பு உச்சிமாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

காசநோய் அற்ற இந்தியா பிரச்சார இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்

Posted On: 13 MAR 2018 3:48PM by PIB Chennai

“காசநோயை எதிர்கொள்வதில் இந்தியா உறுதியுடன் இப்பணியை ஒரு இயக்கமாக செய்து வருகிறது.  2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோய் இருக்காது என்று நான் நம்புகிறேன்”  என புதுதில்லியில் இன்று தொடங்கிய  காசநோய் ஒழிப்பு உச்சிமாநாடு மற்றும் காசநோய் அற்ற இந்தியா பிரச்சார இயக்கத்தை தொடங்கிவைத்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே. பி. நட்டா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி. அனுப்பிரியா பட்டேல், உலக சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநர் டாக்டர். டெட்ரோஸ் அதானம் கிப்ரேயேசஸ், ஸ்டாப் டி பி பாட்னர்ஷிப் முன்னாள் இயக்குநர் திருமதி. லூசிகா திஃப்யூ மற்றும் 20 நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள் இந்த உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய  அலுவலகம் மற்றும் ஸ்டாப் டி பி பாட்னர்ஷிப் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறது. 

உலகில் காசநோயை ஒழிப்பதற்கான முயற்சியில் இந்த மாநாடு ஒரு மைல்கல்லாக அறியப்படும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் திரு. ஜே. பி. நட்டா, பிரதமர் வழங்கும் தங்குதடையற்ற உதவி, சிறந்த உந்து சக்தியாக உள்ளது என்று கூறினார்.  பிரதமர் இந்த முன்னோடி செயலை செய்வதற்கும், எங்களுடைய இலக்குகளை வேகப்படுத்தி செயல்பாட்டை துரிப்படுத்தவும் தங்களை வழிநடத்தியதாக திரு. நட்டா மேலும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநர் டாக்டர். டெட்ரோஸ் அதானம் கிப்ரேயேசஸ், இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு சரியான இடம் இதுதான் என்றும், சர்வதேச அளவில் காசநோயை ஒழிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவை விட ஐந்து ஆண்டுகள் முன்கூட்டியே இந்தியா இதை செய்து காட்ட திட்டமிட்டிருப்பது தைரியமான, பாரட்டக்கூடிய மற்றும் முன்னோடியாக செயல் என்று கூறினார்.

இந்தியா 12,000 கோடி ரூபாய் செலவில் காசநோயை ஒழிப்பதற்காக அடுத்த மூன்றாண்டுகளில் காசநோயாளிகளுக்கு  சிறந்த சிகிச்சை மற்றும் உதவி வழங்கும் வகையில், வரலாற்று சிறப்புமிக்க தேசிய செயல்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. 

மேலும் விவரங்களுக்கு, www.pib.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.



(Release ID: 1524139) Visitor Counter : 164


Read this release in: Telugu , English , Urdu , Hindi