கலாசாரத்துறை அமைச்சகம்

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்பு 3686 நினைவுச் சின்னங்கள்/இடங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது: டாக்டர் மகேஷ் சர்மா

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2018 6:23PM by PIB Chennai

மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் நிலைய மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக, கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் திட்ட வடிவமைப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.  54 நிறுவனங்களைச் சேர்ந்த 110 வல்லுநர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ரயில்வே நிலையங்களை மேம்படுத்துவது மற்றும் மறுசீரமைப்பது ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில், கட்டிட வடிவமைப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுநிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்தில் கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் திட்ட வடிவமைப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்; நிலைய வடிவமைப்புத் தொடர்பாகபல்வேறு ஆவணங்களில்  செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்; நிலைய மறு மேம்பாட்டுத் திட்டம் செல்ல வேண்டிய பாதை ஆகியவை  குறித்து விரிவான ஆலோசனை இந்தக் கூட்டத்தில் நடைபெற்றது.

ரயில் நிலையங்களை மேம்படுத்தக் கூடிய ஒரே நிறுவனமான இந்திய ரயில்வே நிலைய மேம்பாட்டு நிறுவனம் நாடுமுழுவதிலும் உள்ள 600 ரயில்வே நிலையங்களில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதுஇதற்காக 635 இந்திய ரயில்வே நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பாக, உரிய பங்கேற்பாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க MyGov இணையத்தில் ஸ்ரீஜன்    ‘SRIJAN’ (Station Rejuvenation Initiative through Joint ActioN) அனைவரும் இணைந்த நிலைய மறுசீரமைப்புத் திட்ட செயலி தொடங்கப்பட்டுள்ளது.  

மிகப்பெரிய அளவிலான இத்திட்டம் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி  பொறியாளர்கள், திட்ட வடிவமைப்பாளர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் இதர வல்லுநர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் தொடங்க வகை செய்யவுள்ளது

இந்த செயலி வாயிலாக இப்போட்டியில் பங்குபெற்று  தங்களுடைய கருத்துக்களை வழங்குவதற்கு 26 மார்ச் 2018 கடைசி நாளாகும்இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்நல்ல வடிவமைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும்இந்திய ரயில்வே நிலைய மேம்பாட்டு நிறுவனத்திற்கான இலச்சினை மற்றும் இலச்சினை சொல் ஆகியவற்றை தருவிப்பதற்காகவும் MyGov இணைய தளம் வாயிலாக போட்டி அறிவிக்கப்பட்டுள்ளதுஇந்த போட்டியில் வெற்றி பெற்று சிறந்த இலச்சினையை வழங்குவோருக்கு 75 ஆயிரம் ரூபாயும், இலச்சினை சொல் எழுதுபவருக்கு 75 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும்இந்த போட்டியில் தங்களுடைய படைப்புகளை சமர்ப்பிக்க 26 மார்ச் 2018 கடைசி நாளாகும்

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1524110) வருகையாளர் எண்ணிக்கை : 145
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu