கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
உன்னாட்டி திட்ட செயலாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2018 2:19PM by PIB Chennai
கப்பல் துறையின் உன்னாட்டித் திட்டத்தின் நோக்கங்களும், குறிக்கோளும் வருமாறு:
- 12 பெரிய துறைமுகங்களின் செயல்பாடு மற்றும் நிதி நடவடிக்கைகளை, இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சில தனியார் துறைமுகங்கள் மற்றும் சிறந்த தரத்திலான சர்வதேச துறைமுகங்களுக்கு இணையாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டுத் திட்டங்களை கண்டறிதல்.
- முக்கிய திட்டங்களுக்கான திறன் முதிர்வு மதிப்பீடு மற்றும் செயல்பாட்டு திறமைகளை மேற்கொள்ளுதல் (உ-ம்., தகவல் தொழில்நுட்பம், மனிதவளம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம்) மற்றும் இடைவெளி மற்றும் வலுப்படுத்துவதற்கான பகுதிகளை கண்டறிதல்.
- 12 துறைமுகங்களிலும் விரிவாக்கத்திற்கு அடையாளம் காணப்பட்ட வாய்ப்புகளுக்கான மூலக்காரணத்தை பகுப்பாய்வு செய்து, அவற்றின் செயல்பாட்டுக்கு தடையாக உள்ள அம்சங்களை விரிவாக ஆய்வு செய்தல்.
- கண்டறியப்பட்ட காரணங்களின் அடிப்படையில் நடைமுறை சாத்தியமான மற்றும் செயல்பாட்டுக்கு உகந்த திட்டங்களை உருவாக்குதல் மற்றும் 12 பெரிய துறைமுகங்களிலும் விரிவான மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள தனித்தனியாக உருவாக்குதல்.
பல்வேறு பெரிய துறைமுகங்களில் உன்னாட்டி திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட வேண்டிய 116 பூர்வாங்கப் பணிகளுக்கான நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த 116 பூர்வாங்கப் பணிகளில் இதுவரை 86 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
உன்னாட்டி திட்டப்பணிகளின் பட்டியல்
வ,எண் துறைமுகத்தின் பெயர் பணிஎண். முன்முயற்சி விவரம் பணியின் தற்போதைய நிலை
|
29
|
வ.உ.சிதம்பரனார்
(தூத்துக்குடி)
|
1.1
|
துறைமுக இறங்குதள கொள்கையில் உற்பத்திக்கான குறிப்பிட்ட சில விதிமுறைகளை சேர்த்தல்
|
நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது
|
|
30
|
1.2
|
இறங்குதளம் 3 மற்றும் 4-ல் நடமாடும் கிரேன்கள் பொருத்துதல்
|
செயல்பாட்டில் உள்ளது
|
|
31
|
1.3
|
இறங்குதளம் 9-ல் சரக்குகள் வெளியேற்றும் பணியை எந்திரமயமாக்குதல்
|
நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது
|
|
32
|
2.1
|
தமிழக மின்வாரிய இறங்குதளங்களில் உதிரி திறனை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்
|
செயல்பாட்டில் உள்ளது
|
|
33
|
2.2
|
அடர் தாமிர கலன்களுக்கான இறங்குதளம் 8-காக குறுகிய கால ஒப்பந்தம் செய்துகொள்ளுதல்
|
நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது
|
| |
|
|
|
|
108
|
சென்னை
|
1.1
|
தனியார் முனையங்களின் உற்பத்தித் திறனை கண்காணித்து ஊக்கப்படுத்துதல்
|
நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது
|
|
109
|
1.3
|
நுழைவாயிலுக்கு முந்தைய முன்சுமை மதிப்பீடுகள் மற்றும் சரக்குப் பெட்டக நிலையத்திற்கு வரும் ட்ரெய்லர் நுழைவு தகவல் பதிவு
|
நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது
|
|
110
|
1.4
|
கேமராக்கள் பொருத்துவதன் மூலம் சரக்குப்பெட்டக ஆய்வுகளை எந்திரமயமாக்குதல்
|
நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது
|
|
111
|
1.5
|
பெங்களுரு உள்நாட்டு சரக்குப்பெட்டக முனையத்தின் செயல்பாடுகளுக்கு கட்டணம் குறைத்தல்
|
நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது
|
|
112
|
1.6
|
துறைமுக உட்பகுதியில் பொதுவான ரயில்வே முனையம் ஏற்படுத்துதல்
|
நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது
|
|
113
|
1.7
|
ரயில்-சாலை வேகன்களின் சோதனை ஓட்டம்
|
செயல்பாட்டில் உள்ளது
|
|
114
|
3.1
|
சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சென்னை துறைமுகத்தின் கட்டணங்களை கிருஷ்ணாபட்ணம் துறைமுகத்துடன் ஒப்பிடுதல்
|
நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது
|
|
115
|
3.2
|
சென்னை-மதுரை இடையே சமையல் எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான தடத்தை ஏற்படுத்துதல்
|
செயல்பாட்டில் உள்ளது
|
|
116
|
4.1
|
எந்திரமயமாக்கப்பட்ட நிரப்பு தளங்களில் முதலீடு செய்வதன் மூலம் உரம் இறக்குமதியை ஈர்ப்பது
|
செயல்பாட்டில் உள்ளது
|
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த கப்பல்துறை இணையமைச்சர் திரு. மன்சுக் மண்டாவியா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தில் காணவும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1523899)
வருகையாளர் எண்ணிக்கை : 245