உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

‘விங்ஸ் இந்தியா 2018’ நிகழ்ச்சி தொடங்கியது

प्रविष्टि तिथि: 08 MAR 2018 8:41PM by PIB Chennai

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் ஃபிக்கி அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விங்ஸ் இந்தியா 2018’ எனும் நான்கு நாள் நிகழ்ச்சி இன்று (8.3.2018) ஹைதராபாதில் தொடங்கியது. இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியின் மையக்கருத்து இந்தியா உலக விமானப் போக்குவரத்தின் மையம் என்பதாகும். ‘விங்ஸ் இந்தியா 2018’ நிகழ்ச்சி மாநிலங்களுக்கும் உலக விமான நிறுவனங்களுக்கும் தொடர்புடைய தரப்பினருக்கும் இடையே கலந்துரையாடல், கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் முதலீடுகள், விமான போக்குவரத்து இணைப்பு ஆகியவற்றுக்கு மேடை அமைத்து தந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில அரசின் மூத்த அமைச்சர்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும், ஃபிக்கி அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலை தளத்தைப் பார்க்கவும்.

                                                                        -----


(रिलीज़ आईडी: 1523619) आगंतुक पटल : 129
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu