நித்தி ஆயோக்

“மகளிர் தொழில்முனைவுத் திறன் தளம்” (WEP) நிதி ஆயோக் தொடங்கியது

Posted On: 08 MAR 2018 2:10PM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மத்திய நிதி ஆயோக் (NITI Aayog) மகளிர்க்கான தொழில்முனைவுத் திறன் தளத்தை (WEP) இன்று (மார்ச் 8) தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் வணிகத்தில் ஈடுபடும் பெண்களின் தொழில்முனைவுத் திறன், புதியன காணும் முனைப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல், நிலையான திட்டம் வகுத்தல், நீண்டகால உத்திகள் கையாளுதல் ஆகியவற்றுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதே மகளிர் தொழில்முனைவுத் திறன் தளத்தின் நோக்கமாகும்.

இந்த மகளிர் தொழில்முனைவுத் திறன் தளத்தை நிதி ஆயோக் முதன்மைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் தலைநகர் தில்லியில் இன்று தொடங்கிவைத்தார். இதற்கான நிகழ்ச்சியில், இந்தியாவுக்கான ஐ.நா. உள்ளுறை ஒருங்கிணைப்பாளர் (UN Resident Coordinator) யூரி அஃபனஸேவ், கைலாஷ் கேர் மற்றும் தொழிலதிபர்கள், பங்குதாரர்கள் பங்கேற்றனர்.

மகளிர் தொழில்முனைவுத் திறன் தளத்துக்கென்று நாரி சக்தி (Naari Shakti)  என்ற கருப்பொருள் பாடலும் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இப்பாடலை திரு கைலாஷ் கேர் பாடியுள்ளார்.

இவற்றுடன், 2018ம் ஆண்டுக்கான இந்திய மாற்றத்துக்கான மகளிர் விருதுகளுக்கான (Women Transforming India Awards, 2018) பரிந்துரையை யூரி அஃபனஸேவ், அமிதாப் காந்த் தொடங்கிவைத்தனர்.

 

 

--------------

 



(Release ID: 1523419) Visitor Counter : 138


Read this release in: English , Urdu