மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

கிராம அளவிலான பெண் தொழில் முனைவோர் இந்தியாவின் கிராமப்புற பெண்கள் டிஜிட்டல் ரீதியாக அதிகாரம் பெற முக்கிய காரண கர்த்தாக்கள்

Posted On: 08 MAR 2018 1:55PM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம் நீதித்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி ஆகியோர் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் துப்புரவை மேம்படுத்தும் மகளிர் சுயமரியாதைஎன்னும் பயிலரங்கை தொடங்கி வைத்தனர். பொது சேவைகள் மையங்களின் வாயிலாக இந்தியாவில் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு ஆரோக்கியம் மற்றும் துப்புரவை மேம்படுத்துவதில் கிராமப்புற மகளிர் தொழில்முனைவோர் மேற்கொண்ட முன்னேற்றம் மற்றும் அதன் தாக்கத்தை இந்த பயிலரங்கு பிரதிபலிக்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்னணியில் பெண்களின் இடத்தை உறுதி செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார். இது, பாகுபாடற்ற சமுதாயத்தை கட்டமைப்பதில் கிராமப்புற மகளிர் தொழில்முனைவோர், மாற்றம் ஏற்படுத்தும் முகவர்களாக செயல்படும் சமூக ஒழுங்குக்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.


(Release ID: 1523409)
Read this release in: English , Hindi