உள்துறை அமைச்சகம்

வன்முறைச் சம்பவங்களை தடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை

Posted On: 07 MAR 2018 9:45AM by PIB Chennai

நாட்டின் சில பகுதிகளில் சிலை உடைப்பு சம்பவங்கள் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சம்பவங்களைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாநிலங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து உரிய சட்டப் பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடியும் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசியுள்ளார்.(Release ID: 1523011) Visitor Counter : 117


Read this release in: English , Urdu