சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மலேரியா ஒழிப்பு
Posted On:
06 MAR 2018 6:12PM by PIB Chennai
உலக சுகாதார அமைப்பின் 2017-ம் ஆண்டு உலக மலேரியா அறிக்கையின்படி தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவில் 87 சதவீத மலேரியா பாதிப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டது.
மலேரியா பாதிப்பு குறித்த மதிப்பீடு கணித மாதிரி மற்றும் மலேரியா பாதிப்பு பற்றிய கணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதால் அது உண்மையான கணக்கை பிரதிபலிப்பதில்லை. மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் அதிக பாதிப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017-ம் ஆண்டில் மலேரியா பாதிப்பு 23 சதவீதம் குறைந்துள்ளது. 2017 கணக்குபடி இந்தியாவில் மலேரியா பாதிப்பு, ஆயிரம் பேருக்கு 0.66 இருந்தது.
(Release ID: 1523001)
Visitor Counter : 178