கலாசாரத்துறை அமைச்சகம்

இந்தியாவிலிருந்து 13 அரிய கலாச்சார பாரம்பரிய அம்சங்கள் இதுவரை யுனெஸ்கோ பட்டியலில் இணைப்பு: டாகடர் மகேஷ் சர்மா

Posted On: 05 MAR 2018 5:49PM by PIB Chennai

மனித குலத்தின் அரிய கலச்சார பாரம்பரியங்களுக்கான யுனெஸ்கோவின் பிரதிநிதித்துவப் பட்டியலில் இதுவரை இந்தியாவில் இருந்து 13 அரிய கலாச்சார பாரம்பரிய அம்சங்கள் இடம்பிடித்துள்ளது.

கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுயாட்சி கொண்ட அமைப்பான சங்கீத நாடக அகாதமியை யுனெஸ்கோவுக்கன பிரதிநிதித்துவ பட்டியலில் சேர்ப்பதற்கான ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட அரிய கலாச்சார பாரம்பரியங்கள் தொடர்பான விவரங்களை கவனிக்கும் தொடர்பு அலுவலகமாக கலாச்சார அமைச்சகம் நியமித்துள்ளது.

இவை தவிர அரிய கலாச்சார பாரம்பரியங்களை மேம்படுத்தவும் பரப்பவும் பணியாற்றி வரும் கலைஞர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நிதி உதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் மத்திய கலாச்சாரதுறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

 

 

*****


(Release ID: 1522890) Visitor Counter : 158
Read this release in: English , Urdu