பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

2018-19-ல் ஷெட்யூல்டு பழங்குடியினர் நலத்திற்கென ஷெட்யூல்டு வகுப்பினர் பகுதி திட்டத்தின் கீழ் ரூ.39,135 கோடி ஒதுக்கீடு

Posted On: 06 MAR 2018 3:17PM by PIB Chennai

நாடெங்கும் உள்ள பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கென 2014-15-ல் வனபந்து கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தின்படி நாடெங்கிலும் உள்ள பழங்குடியின மக்களுக்கு பொருட்களும், சேவைகளும் சென்று சேருவதை உறுதி செய்வதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

2016-17 முதல் வன்பந்து கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் தனியாக நிதி ஒதுக்கீடு செய்வது கைவிடப்பட்டது. இந்த அணுகுமுறை திட்டத்துக்கான நிதித் தேவைகள் பழங்குடியினர் சிறப்பு திட்டத்தின் (இப்போது பழங்குடியினர் பகுதி நிதியம் என அழைக்கப்படுகிறது) கீழ் நிறைவு செய்யப்பட்டது.

ஷெட்யூல்டு பழங்குடியினரின் பொருளாதார சமூக மேம்பாடு மத்திய அரசின் முக்கிய கவனத்தை பெற்று வருகிறது. 2016-17ல் ரூ.21,811 கோடியாக இருந்த ஷெட்யூல்டு வகுப்பினர் பகுதி ஒதுக்கீடு 23017-18 மறுமதிப்பீட்டில் ரூ.32,508 கோடியாக உயர்த்தப்பட்டது. 2018-19 பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.39,135 கோடி இந்த பகுதி திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஷெட்யூல்டு வகுப்பினர் நலத்துக்கான இந்த ஒதுக்கீடு 2012-13ல் செய்யப்பட்ட ஒதுக்கீட்டைப் போல 94 சதவீதம் கூடுதலாகும்.

மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான இணையமைச்சர் திரு.ஜஸ்வந்த்சின் சுமன் பாய் பாபர் இத்தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in. என்ற வலைதளத்தை பார்க்கவும்.

                                ---


(Release ID: 1522862)
Read this release in: English , Urdu