பாதுகாப்பு அமைச்சகம்

கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கைகள்

Posted On: 05 MAR 2018 3:04PM by PIB Chennai

மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த பயங்கரவாத சம்பவத்தை அடுத்து கடலோரப் பகுதிகளிலும் கப்பல் மற்றும் கடல்பாதையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கடல்வழி மற்றும் கடலோரப் பாதுகாப்பு தேசிய கமிட்டி (NCSMCS) என்ற அமைப்பு தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பாகும். அதில், சம்பந்தப்பட்ட எல்லா அமைச்சகங்களும், அரசு ஏஜென்சிகளும் இடம்பெற்றுள்ளன. கடலோரப் பாதுகாப்பு கடல்வழி ஆகியவற்றை ஆராய்வதற்கான உயரிய அமைப்பு இது. இந்த அமைப்பின் கூட்டம் கடைசியாக 2017ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி நடைபெற்றது.

கண்காணிப்பை வலுப்படுத்துவதற்காகப் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடலோரக் கண்காணிப்பு கட்டமைப்பு (Coastal Surveillance Network) எனப்படும் மின்னணு ராடார் சங்கிலித் தொடர் அமைப்பு, ஒரே இடத்திலிருந்தபடி நுண்ணறியும் ரடார், தானாகவே அடையாளம் காணும் கருவி(AIS), நீண்ட தொலைவில் உள்ளதையும் கண்டறிவதுடன், தொடர்ந்து கண்காணிக்கும் கருவி(LRIT), இரவு பகல் இரு வேளையும் தீவிரமாகக் கண்டறியும் கேமிராக்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன. இவை 51 கடற்படைக் கப்பல்கள், இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் நிலையங்கள் மூலம் கடல்பாதை விழிப்புணர்வுக்குத் துணை புரிகின்றன.

இவற்றுடன் துறைமுகங்களில் இருக்கும் கப்பல் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைக்கான ராடார் கருவிகளும் இந்தக் கண்காணிப்புக்குத் துணை புரியும். இத்தகவல்களை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் பாம்ரே மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

---------------

 



(Release ID: 1522621) Visitor Counter : 144


Read this release in: English