பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ முகாம்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள்
प्रविष्टि तिथि:
05 MAR 2018 3:02PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீரில் சஞ்ஜூவான் இராணுவ அரண் உட்பட இராணுவ முகாம்கள் மீது கடந்த 3 ஆண்டுகளில் தாக்குதல்கள் நடந்துள்ளன. மேலும் ஸ்ரீநகரில் உள்ள கரண்நகர் சி.ஆர்.பி.எப். முகாமுக்குள் தீவிரவாதிகள் நுழைய முயன்றனர்.
இது தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கு, அவற்றின் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விரிவான வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.
தீவிரவாத சம்பவங்கள் குறித்து இராணுவம் விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு சம்பவங்களின் வாயிலாக பாதுகாப்பு சரியில்லாமல் இருந்தது பற்றியும் கண்டறிந்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று திரு. மோதிலால் வோராவின் கேள்விக்கு பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் பாம்ரே எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு : www.pib.nic.in இணையத் தளத்தில் பார்க்கவும்.
(रिलीज़ आईडी: 1522611)
आगंतुक पटल : 115