வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
அரக்கு பள்ளத்தாக்கில் விளையும் காபிக்கு பிரிமீயம் என்கிற அடையாளம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2018 2:26PM by PIB Chennai
ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அரக்கு பள்ளத்தாக்கில் பழங்குடியின சமூகத்தினர் பயிர் செய்யும் காபியின் தனி அடையாளத்தை பாதுகாப்பதற்காக புவியியல் குறியீடு திட்டத்தின்கீழ் அதனைப் பதிவு செய்வதற்கு காபி வாரியம் மனு செய்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் வர்த்தகத்தொழில்துறை இணையமைச்சர் திரு சி ஆர் சவ்தாரி இந்த தகவலை தெரிவித்தார்.
அரக்குப்பள்ளத்தாக்கில் பயிராகும் அராபிகா காபி உயர்தரமான சிறப்பு காபி என சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிராகும் காபிக்கு அவை பயிர் செய்யப்படும் புவியியல் தனித்தன்மை அடிப்படையில் அவற்றுக்கென தனியாக, சின்னங்களை காபி வாரியம் உருவாக்கி வருகிறது.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1522603)
வருகையாளர் எண்ணிக்கை : 174