மத்திய அமைச்சரவை
இந்தியாவுக்கும், ஃபிஜிக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
28 FEB 2018 6:29PM by PIB Chennai
இந்தியாவுக்கும், ஃபிஜிக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஃபியூஜியில் சூவா என்ற இடத்தில் 2017 மே மாதம் 27-ம் தேதி கையெழுத்திடப்பட்டது.
பரஸ்பர நன்மை, சமத்துவம், பரஸ்பர உதவி ஆகியவற்றின் அடிப்படையில் புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி பிரச்சினைகளில் தொழில்நுட்ப இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி அதனை ஊக்குவிப்பதற்கு நிறுவன உறவுகளை உருவாக்குவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி திட்டங்களை ஆய்வு செய்தல், கண்காணித்தல், ஒத்துழைப்புக்கான விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல் ஆகியவற்றுக்கென கூட்டுப்பணிக்குழு அமைக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. நிபுணத்துவ பரிவர்த்தனை, தகவல் கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கும் ஒப்பந்தம் வகை செய்கிறது.
இருநாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1522468)
வருகையாளர் எண்ணிக்கை : 104