பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு
பொருளாதாரம் வேகமெடுப்பதற்கான சரியான பாதையில் உள்ளது: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுத் தலைவர்
Posted On:
28 FEB 2018 6:37PM by PIB Chennai
2017-18 நிதியாண்டின் மூன்றாவது பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.2 சதவீத வேகத்தில் வளரும் என புள்ளியியல் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான மூன்றாம் பகுதி மதிப்பீட்டை அது வெளியிட்டது.
ஜிடிபி வளர்ச்சி குறித்த கணிப்பு சரியானதே என்று கூறிய பிரதமர் பொருளாதார ஆலோசனைக்குழுத் தலைவர் டாக்டர் பிபேக் தெப்ராய் நாட்டின் பொருளாதாரம் வேகமெடுக்கும் நிலையில் சரியான பாதையில் உள்ளது என்றும் வளர்ச்சி வீதத்தின் தற்போதைய உயர்வு நிலை அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள் பலன் அளிக்க தொடங்கிவிட்டதையே காட்டுகிறது என்றார். அடுத்த காலாண்டில் வளர்ச்சி வீதம் மேலும் உயரும் என்று அவர் கூறினார். அமைப்புச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் அரசின் உறுதிப்பாடு இதற்கு வழிவகுக்கும் என்றார். தொழிலியல் மற்றும் சேவைகள் துறை ஆகியவற்றின் உயர் வளர்ச்சியோடு மத்திய அரசின் செலவினங்கள் உயர்வதும் இதற்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
(Release ID: 1522358)