தேர்தல் ஆணையம்
2018ம் ஆண்டு சட்டப் பேரவை பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு: மாலை 4 மணி வரையில் நாகாலாந்தில் 75%, மேகாலயாவில் 67%
प्रविष्टि तिथि:
27 FEB 2018 7:23PM by PIB Chennai
மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (பிப்ரவரி 27) நடைபெற்றது. நாகாலாந்தில் வாக்காளர்கள் பெருமளவு திரண்டுவந்து தங்களது வாக்குகளைப் பதிவுசெய்தனர். மாலை நான்கு மணிவரையிலான நிலவரப்படி நாகாலாந்தில் 75 சதவீதமும், மேகாலயாவில் 67 சதவீதமும் பதிவாயின.
59 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேகாலயா மாநிலத்தில் 3,025 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அவற்றில் பழங்குடியினர் ஒதுக்கீட்டுக்கான வில்லியம் நகர் (எண் 43) தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கடந்த பிப்ரவரி 18ம் தேதி மறைந்துவிட்டதால், அத்தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
நாகாலாந்தில் 59 தொகுதிகளில் 2,156 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
பதிவான வாக்குகள் 2018, பிப்ரவரி 28ம் தேதி சேகரித்து, பாதுகாக்கப்படும். வாக்குகள் எண்ணிக்கை 2018, மார்ச் 3ஆம் தேதி நடைபெறும்.
==============
(रिलीज़ आईडी: 1522028)
आगंतुक पटल : 185