விவசாயத்துறை அமைச்சகம்

2017 -18ஆம் ஆண்டில் முக்கிய பயிர்களின் விளைச்சல் பற்றி வேளாண் துறையும், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையும் வெளியிட்டுள்ள இரண்டாவது மதிப்பீடு

2017-18ல் சாதனை அளவாக தானிய உற்பத்தி மதிப்பீடு
மொத்த உணவுப்பொருள் உற்பத்தி சாதனை அளவாக 277.49 மில்லியன் டன்னாக உயர்வு மதிப்பீடு
பருப்பு வகைகள் உற்பத்தி 23.95 மில்லியன் டன்னாக உயரும் மதிப்பீடு
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 29.88 மில்லியன் டன்னாக உயரும் மதிப்பீடு
கரும்பு உற்பத்தி 353.23 மில்லியன் டன்னாக உயரும் மதிப்பீடு

Posted On: 27 FEB 2018 6:00PM by PIB Chennai

2017- 18ஆம் ஆண்டில் முக்கிய பயிர்களின் விளைச்சல் பற்றி வேளாண் துறையும்,  கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையும் இரண்டாவது மதிப்பீட்டை புதுதில்லியில் இன்று வெளியிட்டுள்ளன. மாநிலங்களிலிருந்தும் இதர வட்டாரங்களிலிருந்தும் கிடைத்த பல்வேறு பயிர்களின் உற்பத்தி விவரத்திலிருந்து இந்த இரண்டாவது மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. 2017–18க்கான மதிப்பீடு உற்பத்தி 2003–04 ஒப்பீடு அடிப்படையில் தரப்பட்டுள்ளது.

2017-18ல் முக்கிய பயிர்களின் விளைச்சல் பற்றிய இரண்டாவது மதிப்பீடு:

  • உணவு தானியம் – 277.49 மில்லியன் டன் (சாதனை)
  • அரிசி – 111.01 மில்லியன் டன் (சாதனை)
  • கோதுமை – 97.11 மில்லியன் டன்
  • மோட்டா ரகம் – 45.42 மில்லியன் டன் (சாதனை)
  • சோளம் – 27.14 மில்லியன் டன் (சாதனை)
  • பருப்பு வகைகள் – 23.95 மில்லியன் டன் (சாதனை)
  • பயறு வகைகள்   – 11.10 மில்லியன் டன் (சாதனை)
  • துவரை – 4.02 மில்லியன் டன்
  • உளுந்து – 3.23 மில்லியன் டன் (சாதனை)
  • எண்ணெய் வித்துக்கள்  – 29.88 மில்லியன் டன்
  • சோயாபீன் – 11.39 மில்லியன் டன்
  • நிலக்கடலை – 8.22 மில்லியன் டன்
  • ஆமணக்கு – 1.50 மில்லியன் டன்
  • பருத்தி– 33.92 மில்லியன் பேல்கள் (ஒவ்வொன்றும் 170 கிலோ)
  • கரும்பு – 353.23 மில்லியன் டன்

 

2017ல் பருவமழை இயல்பாக இருந்ததாலும், அரசின் கொள்கை முயற்சிகளாலும் நாடு உணவு தானிய விளைச்சலில் சாதனை படைத்தது. 2017-18 உணவுதானிய உற்பத்தி முந்தைய ஆண்டைக்காட்டிலும், 2.37 மில்லியன் டன் கூடுதலாகி சாதனை அளவாக இருந்தது.

அரிசி உற்பத்தி 2016-17-விட 1.13 மில்லியன் டன் கூடுதலாக இருந்து, 109.70 மில்லியன் டன்னாக இருந்தது. 106.29 மில்லியன் டன்னாக இருந்த ஐந்தாண்டு சராசரி அளவைவிட, 4.71 மில்லியன் டன் கூடுதலாக இருந்த்து.

கோதுமை விளைச்சலில் 2016-17ல் சாதனை அளவான 98.51 மில்லியன் டன்னைவிட, 1.40 மில்லியன் டன் குறைந்து, 97.11 மில்லியன் டன்னாக மதிப்பிடப்பட்டது. எனினும், 2017-18ல் இந்த உற்பத்தி 3.77 மில்லியன் டன் சராசரி அளவைவிட கூடுதலாகும்.

மோட்டா ரக தானியங்கள் சராசரி உற்பத்தியைவிட 3.72 மில்லியன் டன் அதிகரித்து 45.42 மில்லியன் டன்னாக  மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2016-17ல் உற்பத்தியான 43.77 மில்லியன் டன்னைவிட, இது 1.65 மில்லியன் டன் அதிகமாகும்.

---------



(Release ID: 1521979) Visitor Counter : 106


Read this release in: English