அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தேசிய அறிவியல் தினம் 2018 – ஒரு முன்னோட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 FEB 2018 12:31PM by PIB Chennai

தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28அன்று கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள டெக்னாலஜி பவனில் நடைபெறும் தேசிய அளவிலான நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புவி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் ஒய்.எஸ்.சௌத்ரி நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கிறார். அறிவியல் தொழில்நுட்பத்தைப் பரப்புவதிலும், அறிவியல் உணர்வுகளை மேம்படுத்துவதிலும் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கான 2017-ஆம் ஆண்டுக்குரிய தேசிய விருதுகளும், இந்த நிகழ்ச்சியின் போது வழங்கப்படும்.

சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெறுவதற்கு வழிவகுத்த “ராமன் விளைவு” கண்டுபிடிக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினம், “நீடித்த எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” என்பதை மையக் கருத்தாகக் கொண்டு, அறிவியல் அம்சங்கள் குறித்து பொதுமக்களின் பாராட்டைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: www.pib.nic.in இணையத்தளத்தைக் காணவும்.


(வெளியீட்டு அடையாள எண்: 1521909) வருகையாளர் எண்ணிக்கை : 166
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu