நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரித் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வது, சுகாதாரச் சேவைகள் வழங்குவது, குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படும் : திரு.பியூஷ் கோயல்
Posted On:
26 FEB 2018 6:47PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று (26.02.18) நடைபெற்ற நிலக்கரிச்சுரங்கங்கள் பாதுகாப்பு குறித்த நிலைக்குழுவின் 42-ஆவது கூட்டத்திற்கு மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பணியிடத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வது, நிலக்கரிச்சுரங்கப் பணியாளர்களுக்கு உரிய சுகாதார வசதிகள், அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்வது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்றும் அப்போதுதான் அனைத்து நிலக்கரிச்சுரங்கங்களிலும், பாதுகாப்புச்சூழல் உருவாக்கப்படும் என்றும், எதிர்கால எந்திரமய நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு இது முக்கியத்துவம் பெறுகிறது என்றும் கூறினார். அடுத்த ஏல நடைமுறைகளின்போது பாதுகாப்பு, சுகாதாரத்தேவைகள் வழங்குதல், குறைந்தப்பட்சஊதியம் போன்ற முக்கிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறினார்.
நிலக்கரித் தொழில்துறையில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குப் பங்கேற்றுள்ள அக்கறை கொண்ட அனைவரும் தங்கள் கருத்துக்களை வழங்க வேண்டும் என்று திரு.கோயல் கேட்டுக்கொண்டார்.
நிலக்கரிச்சுரங்கங்களின் பாதுகாப்பு குறித்த நிலைக்குழுக்கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், குழுவின் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் கூட்டங்களின் தேதிகள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படவேண்டுமென இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிலக்கரிச்சுரங்கங்களில் பாதுகாப்புத்தரங்களை மேம்படுத்துவதற்கு இந்த நிலைக்குழு மிக முக்கியமான பங்கினை ஆற்றிவருகிறது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்
-----
(Release ID: 1521891)
Visitor Counter : 78