பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய விமானப்படை, விமானப்படை பொது நுழைவுத் தேர்வை முதல்முதலில் இணையத்தள வாயிலாக நடத்தியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2018 11:59AM by PIB Chennai

மின்னணு இந்தியா முன்முயற்சியை மேம்படுத்தும் வகையில்,  இந்திய விமானப்படை, பொது நுழைவுத் தேர்வு மற்றும் அதிகாரிகள் பணிக்கான தேர்வை மேம்பட்டக் கணினி மற்றும் வளர்ச்சி மையத்தின் உதவியுடன் முதல்முறையாக இணையத்தள வாயிலாக நடத்தியுள்ளது.

விமானப்படைக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக விமானப்படை பொது நுழைவுத்தேர்வு 2018, பிப்ரவரி 25 –ம் தேதி 25 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள 99 நகரங்களில் உள்ள 536 மையங்களில் ஒரே கட்டமாக முதல்முறையாக இணையதள வாயிலாக நடத்தப்பட்டது.

நாடு முழுவதிலும் உள்ள சுமார் 450 மையங்களில் இந்தத் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. எனினும் சில மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1521717) வருகையாளர் எண்ணிக்கை : 137
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu