நிதி அமைச்சகம்

உள்ளார்ந்த உயர் வளர்ச்சிக்காக பொதுமக்கள், நிறுவனங்களிடம் இருந்து ஆலோசனைகள், கருத்துகளை பதினைந்தாவது நிதி ஆணையம் வரவேற்கிறது.

Posted On: 22 FEB 2018 4:42PM by PIB Chennai

பதினைந்தாவது நிதி ஆணையம் விதிமுறைகளுக்காக பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து ஆலோசனைகளையும், கருத்துகளையும் வரவேற்றுள்ளது.

ஆணையத்தின் பரிசீலனையில் உள்ள சில முக்கிய விஷயங்கள் வருமாறு:

  1. பதினான்காவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றி மாநிலங்களுக்கு வரிப் பரவலாக்கத்தை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியதால் ஏற்பட்டுள்ள நிதிநிலையின் தாக்கத்துடன் 2022 புதிய இந்தியா திட்டம் உள்ளிட்ட தேசிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதும் அவசியமாகிறது.
  2. ஜி.எஸ்.டி நடைமுறையால், ஐந்தாண்டுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிகட்ட இழப்பீடு வழங்குவது, ஏராளமான தீர்வைகள் ரத்து, இதர அமைப்பு ரீதியிலான சீர்திருத்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால்,  மத்திய மாநில அரசுகளின் நிதிநிலையில் தாக்கம் ஏற்படுகிறது.     
  3. ஜி.எஸ்.டி-யின் கீழ், வரி வளையத்தை விரிவுபடுத்தும் மாநிலங்கள் எடுத்த முயற்சிகள்.
  4. மக்கள் தொகை பெருக்க விகிதத்துக்கு மாற்றாக எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் முன்னேற்றம்.
  5. வரி, வரியல்லாத வருவாயைப் பெருக்குவது, நேரடி பயன்மாற்று திட்டத்தை கடைபிடித்து சேமிப்பை அதிகரிப்பது, பொது நிதி மேலாண்மை முறை, டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, அரசுக்கும், பயனாளிகளுக்கும் இடையிலான அடுக்குகளை அகற்றுவது ஆகியவற்றில் அடைந்துள்ள முன்னேற்றம்.
  6. சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, திறந்தவெளி கழிப்பிட முறையை முடிவுக்கு கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றில் அடைந்த முன்னேற்றம்.

கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க விரும்பும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் 2018 ஜூன் 30 ஆம் தேதிக்குள் பின்வரும் முறையில் அவற்றைத் தெரிவிக்கலாம்.

  1. செயலர், 15-வது நிதி ஆணையம், 9-வது தளம், ஜவஹர் வியாபார் பவன், டால்ஸ்டாய் மார்க், புதுதில்லி - 110001 என்ற முகவரிக்கு அஞ்சல் அனுப்பலாம்.
  2. secy-xvfc[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.
  3. http://fincomindia.nic.in என்ற வலைதளத்தின் மூலமாக ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என்று குறிப்பிட்டு அனுப்புவது.


(Release ID: 1521469) Visitor Counter : 123


Read this release in: English