மத்திய பணியாளர் தேர்வாணையம்

யுபிஎஸ்சி பொறியியல் சேவைகள் (முதனிலை) தேர்வு 2018-ன் முடிவுகள் வெளியீடு

Posted On: 19 FEB 2018 4:46PM by PIB Chennai

2018. ஜனவரி 7-ம் தேதி அன்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய பொறியியல் சேவைகள் (முதனிலை) தேர்வு. 2018-ன் முடிவு வெளியிட்டுள்ளன. இந்த முடிவுகள் http://www.upsc.gov.in என்ற யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் காணலாம். முதன்மை தேர்வு 2018 ஜூலை 1-ம் தேதி நடைபெறும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் வளாகத்தில் சிறப்புச் சாளரத்தைத் திறந்துள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் தேர்வு முடிவு தொடர்பான தகவல் மற்றும் விளக்கத்தை வார நாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நேரில் அல்லது தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ளலாம். தொலைபேசி எண்கள்-23388088. (011)-23385271, 23381125, 23098543.



(Release ID: 1521014) Visitor Counter : 95


Read this release in: English , Urdu