குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கல்வி மாணவர்களுக்கு இடையே வலுவான பண்பை உருவாக்கி நன்னெறி மற்றும் தார்மீக மதிப்புகளை விதைக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 19 FEB 2018 12:30PM by PIB Chennai

கல்வி மாணவர்களுக்கு இடையே வலுவான பண்பை உருவாக்கி  நன்னெறி மற்றும் தார்மீக மதிப்புகளை விதைக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு குறிபிட்டுள்ளார். மும்பையில் இன்று நடைபெற்ற ஆர். ஏ. போடார் வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கல்லூரியின் பவள விழா கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் வீட்டுத் வசதி துறை அமைச்சர் திரு. பிரகாஷ் மேத்தா உள்ளிட்ட பல பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மனஅழுத்தம் அற்ற சூழ்நிலை வீட்டிலும் பள்ளியிலும் நிலவுவதை பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். குழந்தைகள் உட்பட்டுவரும் மனஅழுத்தத்தையும் அதன் எச்சரிக்கை அறிகுறிகளையும் பல நேரங்களில் பெற்றோர்களே கவனிக்கத் தவறுவது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று அவர் தெரிவித்தார். இந்த முக்கியப் பிரச்சனை பிரதமர் திரு. நரேந்திர மோடியின் இதயத்திற்கு நெருக்கமாக இருக்ககூடியது. பிரதமர் பரீட்சைகளால் ஏற்படும் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பது குறித்து தேர்வுப் போராளிகள் (EXAM WARRIORS) என்ற நூலை எழுதியுள்ளார்.

நமது நாட்டில் உள்ள பரந்த மனித வளத்தை ஜனநாயக லாப பங்காக” மாற்றுவதுதான் அனைவரின் முன் உள்ள பெரும் சவாலாகும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். வரும் ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதற்கு இதனை நாம் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். அனைத்து முறையிலும் தனிநபரின் ஒட்டுமொத்த ஆளுமையைக் கல்வி வளர்க்க வேண்டும். மேலும், அது அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் அறிவு அடிப்படையிலான முடிவுகளை எடுக்க அவர்களைத் தயார் செய்ய வேண்டும் என்றார் அவர்.

கல்வி இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து அறிவொளியூட்ட வேண்டும்.  அவர்களின் பகுப்பாய்வுத் திறனை அதிகரிக்க வேண்டும். அவர்கள் புதிய வழிகளை ஆராய, கண்டறிய மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வழிவகுக்க வேண்டும். தரமான மற்றும் உள்ளடக்கிய கல்வி வழங்காமல் மேலும் மேலும் கட்டிடங்களைக் கட்டுவது மட்டும் புதிய இந்தியாவை உருவாக்க வழிவகுக்காது.  கல்வி அணுகக் கூடியதாக மட்டும் அல்ல மலிவாகவும் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அளிப்பதோடு அது மக்களுக்கு அதிகாரம் அளித்து அறிவொளியூட்டவும் வேண்டும் என்று அவர் கூறினார்.



(Release ID: 1520942) Visitor Counter : 179


Read this release in: English , Urdu