பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

கம்பெனிகள் சட்ட விதிகளின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3,09,619 இயக்குனர்களில் 2,10,116 பேர் மூடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவில் இடபெற்றுள்ளனர்

Posted On: 09 FEB 2018 10:14AM by PIB Chennai

2013 கம்பெனிகள் சட்ட விதிகளின்படி அமைக்கப்பட்ட நிறுவனங்களை வரன்முறைப்படுத்துவது கட்டாயமாகும். எனினும் இயக்குனர்கள் தகுதி நீக்கம் செய்வது தொடர்பான விதிகள் கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 164(2)() தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு நிதி அறிக்கைகள் அல்லது வருடாந்திர கணக்குகளைத் தாக்கல் செய்யாத நிறுவனத்தின் இயக்குனராக இருந்த அல்லது உள்ள நபர் ஒருவர் அந்த நிறுவனம் அவ்வாறு செய்யத் தவறும் நாளில் இருந்து ஐந்தாண்டு காலத்திற்கு அந்த நிறுவனத்தின் இயக்குனராக மறு நியமனம் செய்யப்படவோ அல்லது வேறு ஒரு நிறுவனத்தின் இயக்குனராகவோ நியமிக்கப்படக்கூடாது  என கூறுகிறது.

இந்தச் சட்டத்தின் 164வது பிரிவில் குறிப்பிடப்பட்டபடி ஒருவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்தால் அவர் வகித்த இயக்குனர் பதவி காலியாகிவிடும் என்றும் இந்தச் சட்டத்தின் பிரிவு 167(1)() கூறுகிறது. கம்பெனிகள் சட்டத்தின் விதி 14(2) (இயக்குனர்கள் நியமனம் மற்றும் தகுதி விதிகள் 2014 ல் நிறுவனங்கள் து இயக்குனர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தவறினால் கம்பெனிகள் சட்டம் 2013ன் பிரிவு 167ன் கீழ் தகுதியிழப்பதாக அறிவிக்கப்படுவார்கள்.

மேற்கூறப்பட்ட விதிகளின் அடிப்படையில் 2.97 லட்சம் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு 226166 நிறுவனங்கள் கம்பெனிகள் பதிவேட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ள. மேற்கூறப்பட்ட 309619 தகுதிநீக்கப்பட்ட இயக்குனர்களில் 210116 தகுதிநீக்கப்பட்ட இயக்குனர்கள் அகற்றப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்களாக இருந்துள்ளனர்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதில் ளித்த நிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. பி.பி. சவுத்ரி இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

***



(Release ID: 1520733) Visitor Counter : 626


Read this release in: English