வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள் (அடிப்படை : 2011-12=100) 2018 ஜனவரி மாதத்திற்கான ஆய்வு

Posted On: 15 FEB 2018 12:19PM by PIB Chennai

2018 ஜனவரி மாதத்திற்கான அனைத்துப் பொருட்களின் அதிகாரப்பூர்வ மொத்த விலைக் குறியீடு (அடிப்படை 2011-12=100) முந்தைய மாதத்தைவிட 0.1 சதவீதம் உயர்ந்துள்ளது. 115.7 (தற்காலிகமாக) சதவீதத்திலிருந்து அது 115.8 (தற்காலிகமாக) சதவீதமாக அதிகரித்துள்ளது.

பணவீக்கம்

மாதாந்திர மொத்த விலை குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட ஆண்டு (2017 ஜனவரியிலிருந்து)   பணவீக்க விகிதம் 2018 ஜனவரி மாதத்தில் 2.84 சதவீதமாக இருந்தது. இது சென்ற மாதத்தில் 3.58 (தற்காலிகமாக) சதவீதமாகவும், கடந்த ஆண்டில் ஒப்பிடுகையில் 4.26 சதவீதமாகவும் இருந்தது. இந்த நிதியாண்டில் இதுவரை உயர்பணவீக்க விகிதம் 2.30 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4.55 சதவீதமாக இருந்தது.

முக்கியப் பொருள்கள்/குழுக்களின் பணவீக்கம் குறித்த விரிவான தகவல்களை வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள pib.gov.in இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

                                                                        -----



(Release ID: 1520641) Visitor Counter : 107


Read this release in: English , Urdu