ரெயில்வே அமைச்சகம்

ரயில் பாதையில் செல்ஃபி / சாகசம் தவிர்க்குமாறு மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் வேண்டுகோள்

Posted On: 25 JAN 2018 3:56PM by PIB Chennai

மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், ரயில் பாதைகளில் செல்ஃபி எடுப்பது / சாகசங்களில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

‘’அன்புள்ள மக்களே

கடந்த சில தினங்களாக ரயில்வே தண்டவாளங்களில் செல்ஃபி அல்லது சாகசம் செய்த இளைஞர்கள் விபத்தில் சிக்குவதாக பல்வேறு செய்திகளும், வீடியோக்களும் வெளிவருகின்றன. இதுபோன்ற விபத்தைக் கேள்விப்படும்போது மனம் வேதனைப்படுகிறது. நீங்கள் அனைவரும் இந்தியாவின் எதிர்காலம் அதனால் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், ரயில்வே தண்டவாளங்களில் எச்சரிக்கை உணர்வுடன், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் இருந்து விலகியிருக்க வேண்டும். ரயில்வே இருப்புப் பாதை மற்றும் கிராசிங்குகளைக் கடக்கும்போது விதிகளையும் அறிவிப்புகளையும் கடைப்பிடியுங்கள்.

ஜெய்ஹிந்த்

பியூஷ் கோயல்’’

***


(Release ID: 1520564) Visitor Counter : 159
Read this release in: English , Hindi