விவசாயத்துறை அமைச்சகம்
இந்திய-ரஷ்ய வேளாண் நல்லுறவின் 70ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டம் பிப்ரவரி 14ம் தேதி நடைபெறுகிறது :
இந்திய - ரஷ்ய வேளாண் வணிக மாநாட்டில் அமைச்சர் திரு. கஜேந்தர் சிங் ஷெகாவத்
प्रविष्टि तिथि:
13 FEB 2018 3:59PM by PIB Chennai
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்டகால அரசுமுறை உறவுகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஓராண்டாக நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அம்சமாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் இரு பெரும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்திய – ரஷ்ய வேளாண் வர்த்தக உச்ச மாநாடு புது தில்லியில் இன்று (பிப்ரவரி 13) நடைபெறுகிறது. இந்திய ரஷ்ய வேளாண் துறை உறவின் 70ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டம் ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் என்ற இடத்தில் 2018ம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது.
புது தில்லி பூசாவில் இந்திய-ரஷ்ய வேளாண் வர்த்தக உச்சி மாநாட்டில் (2018) மத்திய வேளாண்துறை இணையமைச்சர் திரு. கஜேந்தர் சிங் ஷெகாவத்தும், ரஷ்யாவின் வேளாண் அமைச்சகத்தின் துணை அமைச்சர் திரு. செர்ஜே பெலெட்ஸ்கியும் பேசினர். அந்த மாநாட்டில் இரு நாடுகளையும் சேர்ந்த வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள பல வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தோரும் பல்வேறு தொழில் நிறுவன அமைப்பின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இது இரு தரப்பினருக்கும் இடையில் உறவுகள், நிபுணத்துவத்தைப் பகிர்தல் ஆகியவற்றை வலுப்படுத்தும்.
இந்த மாநாட்டில் இரு நாட்டவரும் வேளாண் தொழில் தொடர்பான வர்த்தக வாய்ப்புகள் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர. கூட்டுச் செயல்பாடுகளுக்கான வாய்ப்புகள், வர்த்தகம் தொடர்பாகவும் நான்கு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான விஷயங்களும் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. 1) வேளாண்மைக்கான இயந்திரங்கள், சுகாதாரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளால் நேரும் சுகாதாரக் கேட்டிலிருந்து தாவரங்களையும் கால்நடைகளையும் பாதுகாத்தல் (phytosanitary), 2) வேளாண்மை குறித்த கல்வி, உயிரி-தொழில்நுட்பம் (biotechnology), 3) தீனி, பாதுகாப்பு, பதனீடு ஆகியவற்றுடன் கூடிய மீன்வளம் மற்றும் கடல் வாழ் உற்பத்திப் பொருள்கள், 4) தின்பண்டம் மற்றும் பேக்கரி உணவுப் பொருட்கள், தேங்காய்ப் பொருட்கள் ஆகியவை தொடர்பாக இந்த அமர்வுகள் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் மற்றும் உணவுப் பதனீட்டு அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்கும் இந்திய மற்றும ரஷ்ய பேராளார்கள் ராஜஸ்தான் சூரத்கர்ரில் உள்ள மத்திய அரசுப் பண்ணைக்கு (Central State Farm - CSF) 14.2.2018ம் தேதி சென்று பார்வையிடுவர். இந்தப் பண்ணை அப்போது இருந்த சோவியத் யூனியனின் உதவியோடு 1956ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அங்கு இந்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இணையமைச்சரும் ரஷ்ய துணை அமைச்சரும் இணைந்து ரஷ்ய இயந்திரவியல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கிறார்கள். பின்னர் அங்கு கூடியிருக்கும் விவசாயப் பெருமக்களிடையில் உரை நிகழ்த்துவர். இந்த நிகழ்ச்சியில் வேளாண் துறைக்கு அரும்பணியாற்றியோர் சிறப்பிக்கப்படுவர். அத்துடன் கால்நடை ஈனும் மையத்துக்கும் (Cattle Breeding Centre) அவர்கள் செல்வர். தார்ப் பாலைவனத்தில் விவசாயத்துக்கு அடித்தளமிட்ட ரஷ்ய விஞ்ஞானிகள் அடித்தளமிட்டனர். அது விவசாயத்தில் நல்ல மாற்றத்தைத் தந்தது. அண்டையில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பகுதியிலும் மாற்றம் கொண்டுவந்தது.
(रिलीज़ आईडी: 1520545)
आगंतुक पटल : 155