சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
“வனப்பரப்பளவு அடிப்படையில் உலகின் முதல் பத்து நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது” : டாக்டர் ஹர்ஷ்வர்தன்
இந்தியாவில் வனப்பரப்பை பெருமளவில் அதிகரித்த ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா மாநிலங்கள் – 2017 வன அறிக்கை வெளியீடு
Posted On:
12 FEB 2018 1:36PM by PIB Chennai
நாட்டின் பசுமை ஆதாரத்தை அதிகரிக்கச் செய்யவேண்டியது அவசியம் என மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் வனப்பரப்பு மற்றும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இந்தியா அவற்றை அதிகரிக்கச்செய்வதில் முன்னணி நாடாக திகழ்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய வனப்பரப்பு பற்றிய அறிக்கை – 2017-ஐ இன்று வெளியிட்டுப் பேசிய டாக்டர் ஹர்ஷ்வர்தன், அதிக வனப்பரப்பை கொண்ட நாடுகளில் முதல் பத்து இடங்களில் இந்தியா இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டினார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற ஒன்பது நாடுகள், மக்கள் தொகை அடர்த்தியில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 150 பேருக்கும் குறைவானர்களைக் கொண்டவை என்றும், இந்தியாதான் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 பேர் வசிக்கும் நாடு என்றும் தெரிவித்தார். நாட்டின் மொத்த நிலப்பரப்பில், 24.4 சதவீதம் வனப்பரப்பாகவும், மரங்கள் நிறைந்த பகுதியாகவும் கொண்ட இந்தியா, உலக அளவில் பத்தாவது இடத்தை பெற்றுள்ளது. இது உலக அளவிலான நிலப்பரப்பில் 2.4 சதவீதம் என்றும், 17 சதவீத மனிதர்களும் 18 சதவீத கால்நடைகளையும் கொண்டபகுதியாக மாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய வனப்பகுதிகளில் மிக அதிக அளவிலான மக்களும் கால்நடைகளும் வசிக்கும் போதிலும், வனச்சொத்துக்களை பாதுகாத்து விரிவுபடுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஐ நா உணவு மற்றும் வேளாண் அமைப்பின் சமீபத்திய அறிக்கையில், வனப்பகுதிகள் மூலம் அதிகம் லாபம் பெறும் முதல் பத்து நாடுகளில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளதாகவும் டாக்டர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
முழுமையான செய்திகளுக்கு பிஐபி இணையதளத்தை பார்க்கவும்.
----
(Release ID: 1520397)
Visitor Counter : 1937