ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே துறையின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன

இதற்காக முதல் அரசுத்துறை வல்லுனர்களின் உரையாடல் கூட்டம் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 08 FEB 2018 10:27AM by PIB Chennai

ரயில்வே துறையின் பாரம்பரியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு மறுசீரமைப்பு முறைகளை மத்திய ரயில்வே அமைச்சகம் கண்டறிந்துள்ளது. நூறாண்டுகால இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் அண்மையில் ரயில்வே ஆணையம் பிராந்திய ரயில்வே மற்றும் பாதூகாப்பு மண்டலங்களைச்  சேர்ந்த பாரம்பரிய அதிகாரிகளின் ஒருநாள் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் பேசிய ரயில்வே ஆணையத்தின் தலைவர் ஸ்ரீ அஸ்வணி லோஹானே இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பங்கேற்பாளர்களை வரவேற்பார். ரயில்வே ஆணையத்தின் செயலாளர் ரஞ்சனேஷ்  ஷாகாய் இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். இதுபோன்ற உரையாடல் நிகழ்ச்சி ரயில்வே துறையில் முதல் முறையாக நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

     பழமைவாய்ந்த பேரி க்யூன் நீராவி என்ஜினின் செயல்பாடு மற்றும் ரிவாரி நீராவி மையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆராய்ந்து வரும் நிலையில் ரயில்வே துறையில் பல்வேறு பகுதிகளில் இதுவரை கண்டறியப்படாத பழமை மற்றும் பாரம்பரியமிக்க பொருட்களை கண்டறிய சிறப்புக் குழு அமைக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. அவற்றை சரியான முறையில் பராமரித்து பாதுகாத்து காட்சிப்படுத்தவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

                                --------

 


(रिलीज़ आईडी: 1519809) आगंतुक पटल : 124
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी