பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
பிரதமர் சமையல் எரிவாயு (உஜ்வாலா) திட்டத்தை விரிவுப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
07 FEB 2018 8:31PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பிரதமர் சமையல் எரிவாயு இணைப்பு திட்டத்தின்கீழ் பயனடைவோரின் இலக்கை ரூபாய் 4,800 கோடி கூடுதல் நிதியுடன் ஐந்து கோடியிலிருந்து எட்டு கோடியாக அதிகரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் சமையல் எரிவாயு இணைப்பு திட்டத்திற்கு அதிக வரவேற்பு குறிப்பாக எரிவாயு இணைப்பு இல்லாத கிராமப்புற மகளிரிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கப்பட்ட இலக்கை 2020-ஆம் ஆண்டிற்குள் அடைய முடியும்.
இத்திட்டத்தின்கீழ் பயனடைவோரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள அதே வேளையில், மத்திய அரசு பிரதமர் உஜ்வாலா திட்டத்தை அமல்படுத்துதல், பெயர் சேர்த்தல், சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பில் விடுப்பட்ட ஏழை எளிய மக்களை இணைத்தல் ஆகியவற்றிற்கும் தீர்வு கண்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த அனைத்து குடும்பங்கள், பிரதமர் ஆயுஷ் யோஜனா, அந்தயோதயா அன்னயோஜனா, மலைவாழ் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள், தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆகியோரும் சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பில் கண்டெடுக்கப்பட்ட குடும்பங்களுடன் சேர்ந்து பிரதமர் சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தில் பயனடையும் வகையில் அமைச்சரவை இத்திட்டத்தை விரிவுப்படுத்தி ஒப்புதல் வழங்கியுள்ளது.
திட்டங்களை மட்டும் அறிவித்ததோடு அல்லாமல் அவற்றை உரிய நேரத்தில் அமல்படுத்தவும் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பிரதமர் சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ், 2017-18ஆம் நிதியாண்டிற்குள் மூன்று கோடி பேருக்கு இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சரியான திட்ட அமல்படுத்தல் மற்றும் மேற்பார்வையிடுதல் விளைவாக இன்றைய தேதிக்கு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் பயன்பெறும் வகையில் 3 கோடியே 35 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 4 கோடியே 65 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இத்திட்டத்தை நேர்த்தியான முறையில் அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் பெண்களிடமிருந்து குறிப்பாக ஊரக மகளிரிடமிருந்து அதிக அளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை ஐந்து கோடியே எட்டியுள்ளதால் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுவோரின் இலக்கை ஐந்து கோடியிலிருந்து எட்டு கோடியாக அதிகரித்தும் இதற்கான கூடுதல் நிதியாக ரூபாய் 4 ஆயிரத்து 800 கோடியை ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
திட்டப்பின்னணி
நாட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பின் மூலம் தூய்மையான எரிவாயு இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2016ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் உஜ்வாலா திட்டம் மூலம் வைப்புத் தொகை இன்றி இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் 2016-17 நிதியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரூபாய் 8 ஆயிரம் கோடி செலவில் 5 கோடி இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அனைவருக்கும் எரிவாயு இணைப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அனைத்து ஊரகப்பகுதிகளுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கின்படி அனைத்து ஊரக மின்சாரம் இல்லா கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மின் இணைப்பு இல்லா குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் சவுபாக்யா திட்டம் தொடங்கப்பட்டது. 2018 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. பிரதம மந்திரியின் உருவாக்குதல் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 28 கோடிக்கும் அதிகமான எல்.இ.டி. பல்புகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
------
(Release ID: 1519765)
Visitor Counter : 306