பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

அங்கன்வாடி சேவைகளுக்கான நிர்வாகத் தகவல் அமைப்பு இணையதளம், பயிற்சித் திட்டத்தை மத்திய மகளிர் ,குழந்தைகள் நல அமைச்சகம் தொடங்கியது

Posted On: 24 JAN 2018 1:43PM by PIB Chennai

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலர் திரு. ராகேஷ் ஶ்ரீவஸ்தவா, புதுதில்லியில் இன்று அங்கன்வாடி சேவைகள் பயிற்சித் திட்டத்துக்கான நிர்வாகத் தகவல் அமைப்பு இணையதளத்தை தொடங்கி வைத்தார். தேசியத் தகவல் மையத்தின் உதவியுடன் , மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்  நிர்வாகத் தகவல் அமைப்பு இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அங்கன்வாடி சேவைகளுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் விண்ணப்பங்கள், மதிப்பீடுகளை ஆய்வு செய்து பயிற்சித் திட்டத்தைத் தேர்வு செய்ய இந்த இணையதளம் பயன்படும். முதல் கட்டமாக தன்னார்வ அமைப்புகள் தங்கள் மாநிலங்கள் யூனியன் பிரதேசத்துக்கான உத்தேச திட்டங்களுடன் விண்ணப்பிக்கலாம். அவற்றைப் பரிசீலித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவைப்படும் நிதி பரிந்துரைக்கப்படும். மத்திய அரசு அவற்றைத் தீவிரமாக ஆய்வு செய்து நிதியை ஒதுக்கும். பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் பயிற்சி பெறும் வகையில் நிதி ஒதுக்குவதை இது உறுதி செய்யும். இந்த தளத்தின் இணைய முகவரிhttp://icds-trg.nic.in ஆகும்.

அங்கன்வாடி சேவைகள் பயிற்சித் திட்டம் ,மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள்  மேம்பாட்டு சேவைத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த நிர்வாகம்திட்டச் செயல்பாட்டுக் கண்காணிப்பு ஆகியவை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கன்வாடிப் பணியாளர்கள், உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு அங்கன்வாடி பணியாளர்கள் பயிற்சி மையங்கள், மற்றும் நடுத்தர பயிற்சி மையங்களில் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையங்கள் அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களினாலோ, அல்லது அவற்றின் மேற்பார்வையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலோ நடத்தப்படுகின்றன. இந்ததிட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியை மாநில அரசுகள்  மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய அரசு ஒதுக்குகிறது.

நிதி ஆயோக்கின் அறிவுறுத்தலின்படி, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விரும்பும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் தங்களை NGO-PS’ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் எண்கள், நிரந்தரக் கணக்கு எண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். பயிற்சிக்கான மத்திய, மாநில அரசுகளின் உதவிகளைப் பெறுவதற்கு  அவசியமான, தனித்துவ குறியீடு உருவாக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே அந்த நிறுவனங்கள் பயிற்சி நடத்த தகுதி பெற முடியும்.

அங்கன்வாடி பயிற்சி மையங்கள், நடுத்தர பயிற்சி மையங்களுக்கான விரிவான விதிமுறைகளை அமைச்சகம் 2017 செப்டம்பரில் இறுதி செய்தது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பயிற்சி மையங்கள் தடையின்றி செயல்பட வசதியாக மின்னணு பயிற்சிக் கையேடும் தயாராக உள்ளது.



(Release ID: 1518158) Visitor Counter : 272


Read this release in: English , Urdu