பாதுகாப்பு அமைச்சகம்

மறைந்த வீர தீர விருது பெற்றவர்களின் மனைவிகளுக்கு உதவி தொகை

Posted On: 21 NOV 2017 11:53AM by PIB Chennai

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 1972 மற்றும் 1995-ல் வெளியிட்ட கடிதத்தின்படி வீர தீர விருது பெற்றவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இந்த கடித வழிமுறை அவ்வப்போது திருத்தப்படும். இந்த உதவி தொகை வழங்குவதற்கு ஏற்கனவே உள்ள நிபந்தனையின் படி வீர தீர விருது பெற்றவர்கள் உதவித் தொகை வழங்கப்படும் அவர்களின் மறைவிற்கு பின் இந்த உதவித் தொகை அவர்களின் சட் ரீதியான மனைவிக்கு வழங்கப்படும். இந்த உதவித் தொகை அந்த மனைவிக்கு அவர் மறுமணம் செய்யும் வரை அல்லது மறையும் வரை வழங்கப்படும். இருப்பினும், இந்த விருது பெற்றவரின் மனைவி விருது பெற்றவரின் சகோதரரையே மறுமணம் செய்து கொண்டால் அவரது உதவித் தொகை தொடரும். இதே போல், குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுள்ள சட்டபூர்வ வாரிசுகளுடன்------

 மறைந்த விருது பெற்றவரின் சகோதரருடன் மறுமணம் செய்தால் மனைவிக்கு உதவித் தொகை தொடரும் என்ற நிபந்தனையை நீக்குமாறு பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.  இதனை ஆலோசித்த மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்று மறைந்த விருது பெற்றவரின் சகோதரரையே மறுமணம் செய்து கொண்டால் மனைவிக்கு உதவித் தொகை தொடரும் என்ற நிபந்தனையை  நீக்கி
யுள்ளது.  இதற்கான கடிதத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் நவம்பர் 16, 2017 அன்று வெளியிட்டுள்ளது.



(Release ID: 1512707) Visitor Counter : 134


Read this release in: English