நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பட்டினியால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை விளக்கம் அளித்துள்ளது.
Posted On:
18 NOV 2017 11:44AM by PIB Chennai
தகுதிவாய்ந்த குடும்ப அட்டை கார்டுதாரர்களுக்கு ஆதார் எண் அளிக்காததாலும், பிஓஎஸ்களில் தங்களுடைய அடையாளத்தை நிரூபிக்கவில்லை என்பதாலும், என்எப்எஸ்ஏ திட்டத்தின் கீழ் மானிய விலையிலான உணவு தானியங்கள் வழங்காததால் பட்டினிச்சாவுகள் ஏற்பட்டதாக சமீபத்தில் ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகின.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரேலியில் இருந்து சமீபத்தில் இந்த செய்தி வெளியானது. ஆனால், மாநில அரசால் அனுப்பப்பட்ட விளக்க அறிக்கையில், சம்பந்தப்பட்டவர் ஏஏஒய் குடும்ப அட்டை வைத்திருந்தார் என்றும், 2017 அக்டோபர் மாத இறுதி வரையில் அவர் வழக்கம்போல் உணவு தானியங்களை பெற்று வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசின் அறிக்கையில், ஆதார் எண் இணைக்காமலேயே 2017 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கு உரிய உணவுதானியங்களை, சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர், ரேஷன் கடையில் வாங்கிச் சென்றுள்ளார் என்றும், 2017 அக்டோபரில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணே, உணவுதானியங்களை வாங்கிச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், 5.2 லட்சம் நியாய விலைக்கடைகள் (எப்பிஎஸ்.கள்) உள்ளன. இவற்றின் மூலம் என்எப்எஸ்ஏ திட்டத்தின் கீழ் 23.2 கோடி ரேஷன் கார்டுகளின் கீழ் 80.7 கோடி பேருக்கு பலன் அளிக்கப்படுகிறது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.83 எப்பிஎஸ்.களில், பொருட்கள் விற்பனைக்கான எலக்ட்ரானிக் பிஓஎஸ் கருவிகள் உள்ளன. இதன் மூலம் எப்பிஎஸ்.களின் அனைத்து விற்பனைகளும் எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியையும் மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. இதுவரையில் 81 சதவீத ரேஷன் கார்டுகளில் குறைந்தபட்சம் ஒரு நபரின் ஆதார் எண்ணாவது இணைக்கப்பட்டுள்ளது. என்எப்எஸ்ஏ திட்டத்தின் கீழ், உரிய நபர்தான் பலன் பெறுகிறாரா என்பதை பயோமெட்ரிக் அடையாளங்கள் மூலம் உறுதிப்படுத்தவே ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. இருப்பினும் கூட, 2017 அக்டோபர் மாதத்தில் 47 சதவீத பிஓஎஸ் விற்பனை, ஆதார் எண் அடையாளம் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆதார் இணைப்பு விதியை அமல்படுத்தும் மாநில அரசுகள், என்எப்எஸ்ஏ.யில் பலன் பெற ஆதார் எண் இல்லை என்பதாலேயே பலனாளிகள் யாருக்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது உறுதியாகிறது.
பொது விநியோகத்துறையை, ஆதார் எண் அடிப்படையிலான பிஓஎஸ் முறைக்கு மாற்றுவதில் பல்வேறு சவால்கள் உள்ளன என்பதை மத்திய அரசு முழுமையாக அறிந்துள்ளது. இதற்காகத்தான், ஆதார் எண் இணைப்பை வலியுறுத்தும் அதே நேரத்தில், என்எப்எஸ்ஏ திட்டத்தின் கீழ் உரிய பயனாளிகள், ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்ற காரணத்திற்காகவோ அல்லது பிஓஎஸ்.சில் அடையாளத்தை உறுதி செய்யவில்லை என்ற காரணத்திற்காகவோ, அவருக்கான பலன்களை மறுக்கக்கூடாது என்று மத்திய அரசு தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அறிவிப்பாணை எஸ்ஓ எண்.371 (இ), தேதி 08/02/2017ல், ரேஷன் கார்டுகளில் ஒரு குடும்ப உறுப்பினரின் ஆதார் எண்ணையாவது 30 ஜூன் 2017க்குள் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம், பின்னர் 30 செப்டம்பர் 2017 வரை நீட்டிக்கப்பட்டது. இது மீண்டும் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31, 2017 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 8 பிப்ரவரி 2017ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் 5 பாராவில், ஒரு குடும்பத்தில் எல்லோருமே ஆதார் எண்ணை வைத்திருந்தாலும், அதில் ஒரே ஒருவர், தன்னுடைய அடையாளத்தை உறுதி செய்யும் நிலையில், தங்கள் குடும்பத்துக்குரிய மொத்த மானிய விலையிலான உணவு தானியங்களையும் அல்லது என்எப்எஸ்ஏ கீழ் உணவு தானியத்துக்கான நேரடி பண பலனை பெறவும் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வலியுறுத்தி, 2017 அக்டோபரில் மத்திய அரசு மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஒருவேளை நெர்வொர்க் / இணைப்பில் பிரச்னை / பதிவீடுகள் இணைப்பில் பிரச்னை அல்லது பயனாளியின் தெளிவற்ற பயோமெட்ரிக் அடையாளம் / பிற தொழில்நுட்ப காரணங்கள் பொருட்களை மறுக்காமல், சம்பந்தப்பட்ட பயனாளி தரும் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டை சரிபார்த்து அவருக்கான மானிய விலை உணவு தானியம் அல்லது உணவு மானியத்தின் கீழான பண பரிமாற்ற பலனை அளிக்க வேண்டும் என்று ஆதார் சட்டம் 7வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், என்எப்எஸ்ஏ.யின் கீழ் பொது விநியோகத்துறையை கண்காணிக்கவும், அதில் உள்ள குறைகளை நீக்கவும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன. மேலும், பொது விநியோகத்துறையை, ஆதார் அடிப்படையிலான உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட சீரிய, வெளிப்படையான, பொறுப்பான முறையாக, எளிமையாகவும், பிரச்னைகள் இன்றியும் அதை மாற்றுவதற்காக மத்திய அரசும் தொடர்ந்து, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்தி வருகிறது.
(Release ID: 1512701)
Visitor Counter : 207