தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இந்தியாவின் பத்து சதவீத மக்கள் தொகைக்கு பயனளிக்கும் வகையில் நாடு முழுவதும் 461 மாவட்டங்களில் இ.எஸ்.ஐ திட்டம் - சந்தோஷ் குமார் கங்க்வார்

Posted On: 08 DEC 2017 4:10PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (தனி பொறுப்பு) இணை அமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்க்வார் இ.எஸ்.ஐ திட்டம் (ஊழியர்கள் அரசு காப்பீட்டு திட்டம்) திடமான வளர்ச்சிப் பாதையை முன்னோக்கி வளர்கிறது. இந்தியாவின் பத்து சதவீத மக்கள் தொகைக்கு பயனளிக்கும் வகையில் நாடு முழுவதும் 461 மாவட்டங்களில் இ.எஸ்.ஐ திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது என்று இ.எஸ்.ஐ கழகத்தின் 172 வது கூட்டத்தில் தெரிவித்தார். இந்த திட்டத்தின் சேவையை மேம்படுத்தம் வகையில் சில முக்கிய முடிவுகள் இச்சந்திப்பில் எடுக்கப்பட்டன.

இதற்கு முன்பு, மாநில அளவில் துணைக் கழகம் / சமூகத்தை அமைப்பதாக இ.எஸ்.ஐ. கழகம் முடிவு செய்திருந்தது. மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில், இ.எஸ்.ஐ.எஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  திருத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமலாக்கம் செய்ய விருப்பம் உள்ள மாநிலங்களுக்கு பொருந்தும். புதிதாக அமைக்கப்படும் கழகம், மாநிலங்களில் உள்ள மருத்துவ பயன்கள் மற்றும் மருத்துவ அமைப்புகளின் மேலாண்மைக்கு உதவும்.

ராஜஸ்தானில் ல்வாரில் உள்ள மருத்துவமனையில் 50 படுக்கை வசதிக்கும், பீகார் பாட்னாவின் பீட்டாவில் உள்ள மருத்துவமனையில் 100 படுக்கை வசதிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

தொடக்க நிலை சேவைகளை வலுப்படுத்தவும், மருத்துவமனையில் கூட்டத்தை குறைக்கவும், முன்பு  இ.எஸ்.ஐ கழகம் மூன்றில் ஒரு பங்கு மருந்தகங்ளை, ஆறு படுக்கை வசதிக் கொண்ட மருத்துவமனைகளாக மாற்ற முடிவு செய்தது. இது படிப்படியாக அமல்படுத்தப்படும்.

இ.எஸ்.ஐ மருத்துவமனை/ மருந்தகங்களில், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள்/ இ.எஸ்.ஐ பி.ஜி.ஐ.எம்.எஸ்.ஆர்-களில் பயின்ற பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களை பயன்படுத்தவதற்கான கொள்கைக்கு ஒப்புதல் வழங்கபட்டுள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனை/ மருந்தகங்களில் உள்ள நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் பற்றாக்குறையால், இ.எஸ்.ஐ கழகம், ஏற்கனவே உள்ள முதுநிலை பட்டப்படிப்பு முடித்த காப்பீடு மருத்துவ அலுவலர்களை நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் பதவிக்கு பணி உயர்வு தர ஒப்புதல் அளித்துள்ளது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலர் திருமதி எம். சத்தியவதி, இ.எஸ்.எஸ்.ஐ.சி தலைமை இயக்குர் திரு. ராஜ் குமார், இ.எஸ்.எஸ்.ஐ.சி-யின் ஊழியர்கள் மற்றும் இ.எஸ்.எஸ்.ஐ.சி-யில் பதிவு செய்து உள்ள நிறுவனங்களின் தலைவர்கள், மூத்த அலுவலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.


(Release ID: 1512288) Visitor Counter : 269
Read this release in: English