பாதுகாப்பு அமைச்சகம்

ஆயுத தொழிற்சாலைகளின் தலைமை இயக்குநராகவும், ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் தலைவராகவும் திரு. எஸ்.கே.சௌராசியா நியமனம்

Posted On: 01 DEC 2017 2:47PM by PIB Chennai

ஆயுத தொழிற்சாலைகளின் தலைமை இயக்குநராகவும், ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் தலைவராகவும் திரு. சுனில் குமார் சௌராஷியா, 2017 டிசம்பர் 1 முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் உறுப்பினராக இருந்த அவர், உதிரிபாக பிரிவுக்கு பொறுப்பு வகித்தார்.

 

ஜபல்பூரில் எந்திரவியல் பொறியாளர் பட்டம் பெற்ற அவர், கான்பூர் ஐஐடியில் எம்.டெக் பட்டமும் பெற்றார். இந்திய ஆயுத தொழிற்சாலை சேவைப் பணியில் 1981 –ம் ஆண்டு சேர்ந்தார்.

 

 

இந்திய அரசு அவரை எம்.பி.ஏ பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பியது. மேலும் சௌராசியா,புதுதில்லி இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு எம்.பில் பட்டம் வழங்கப்பட்டது.

 

ஆயுதத் தளவாட ஆலையில் பணியில் இருந்தபோது, உற்பத்தி மற்றும் இயக்க நிர்வாகம், ஆயுதம் மற்றும் வெடி பொருள் உற்பத்தி ஆகியவற்றில் சிறப்பான அனுபவத்தை அவர் பெற்றார். அவருடைய பணி நிமித்தம் உலகம் முழுவதும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

 

திரு. சௌராசியா இந்திய அரசின் துணை செயலராகவும், அதன் பின்பு

1992 முதல் 1997 வரை பாதுகாப்புத் துறையில் இயக்குநராகவும் பணியாற்றினார். 2002 முதல் 2005 வரை பொதுத்துறை நிறுவனங்களின் தலைமைக் கண்காணிப்பு அதிகாரியாகவும் இருந்துள்ளார். 2005 முதல் 2008 வரை மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை பிரிவில் இயக்குநர் மற்றும் ஆணையர் பொறுப்பையும் அவர் வகித்துள்ளார். ஆயுதத் தளவாட ஆலை வாரியத்தின் உறுப்பினராவதற்கு முன்பு திருச்சி ஹெவி அல்லாய் திட்டப் பொது மேலாளராகவும், கான்பூர் ஆயுத தொழிற்சாலையின் முதுநிலைப் பொது மேலாளராகவும்  இருந்துள்ளார்.

 

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் திரு. சௌராசியா பெயர் பெற்றவர். இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தி துறையில் மாறுதலை அவர் பாரட்டியுள்ளார். பாதுகாப்பு உற்பத்தியில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததால்,  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து  புதியவர்கள் நுழைய ஏதுவாகி உள்ளது. பாதுகாப்புச் சந்தை தாராளமயமாக்கப்பட்டதால், வாடிக்கையாளர்களின் கூடுதல் எதிர்பார்ப்புகள், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உள்ள போட்டிகள் ஆகியவை ஆயுதத் தளவாட ஆலை எதிர் நோக்கியுள்ள சவால்களாகும். இந்த சவால்களைச் சமாளிக்க தரமான உற்பத்தி தேவை என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

 

 

அதேசமயம்,ஒவ்வொரு சவாலும் ஒரு வாய்ப்பை அளிப்பதாக திரு. சௌராசியா நம்புகிறார். பாதுகாப்பு துறையில் உற்பத்தியை அதிகரிக்க ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொதுத்துறை மற்றும் தனியார் பங்கேற்புடன் புதிய பொருள்  உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்பதே ஆயுத தளவாட ஆலையின் தாரக மந்திரமாகும். 200 ஆண்டு பழமையான நிறுவனம் ,ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முக்கிய அம்சங்களை அடையாளம் கண்டுள்ளது. வளர்ச்சியைத் தூண்டும் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

 

ஆயுதத் தளவாட ஆலை இயன்ற அனைத்து ஆதாரத்தையும் ஒருங்கிணைத்து போட்டியில் உயர்ந்து நின்று ,நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முழுமையான நிறுவனமாக இருக்க வேண்டும் என்று  திரு. சௌராசியா வலியுறுத்தியுள்ளார்.



(Release ID: 1511678) Visitor Counter : 198


Read this release in: English