பிரதமர் அலுவலகம்
எல்லைப் பாதுகாப்பு படையின் உதய தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
01 DEC 2017 11:05PM by PIB Chennai
எல்லைப் பாதுகாப்பு படையின் உதய தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் எல்லைப் பாதுகாப்பு படையின் உதயதினத்தை முன்னிட்டு அவர்கள் தன்னிகரற்ற அரண்போன்ற பாதுகாப்பிற்கும், குறையற்ற தேச சேவைக்கும் என் வாழ்த்துகள். நம்மை எதிரிகளிடமிருந்தும், இயற்கைச் சீற்றம் மற்றும் விபத்துக்களின் போதும் இன்னல்கள் அண்டவிடாமல் பாதுகாக்கிறார்கள். எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது நாம் பெருமைப் படுகிறோம்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
(रिलीज़ आईडी: 1511469)
आगंतुक पटल : 177