குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புரிந்துணர்வு பாலத்தை அமைக்க மொழிகள் உதவ வேண்டும்- குடியரசு துணைத்தலைவர்
தென்னிந்திய ஹிந்தி பிரசார சபையின் 16 – வது பட்டமளிப்பு விழாவில் உரை
Posted On:
19 NOV 2017 1:35PM by PIB Chennai
தகவலும், ஞானமும் மக்கள் இடையே அறிவொளி ஏற்படுத்துவதால் ,நல்ல நிர்வாகத்துக்கு மொழிகள் உதவ முடியும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு.எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஹைதராபாத்தில் நவம்பர் 19-ம் தேதி நடந்த தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபையின் 16-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அவர் உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் , தெலங்கானா துணை முதலமைச்சர் திரு. முகமது மஹமூது அலி, சென்னையில் உள்ள தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபையின் துணைத்தலைவர் திரு.எச்.ஹனுமந்தப்பா, ஆந்திரா மற்றும் தெலங்கானா தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபையின் தலைவர் திரு. ஓபையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மொழி சார்ந்த நல்லெண்ணம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் ஹிந்தி மொழி வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய பங்காற்றி உள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கு ,பெரும்பாலான இந்தியர்கள் பேசும் மொழியைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார்.
1936-ம் ஆண்டு விஜயவாடாவில் தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபையின் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைவர்களாக இருந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் திரு. கொண்டா வெங்கப்பையா பந்துலு, ஆந்திர கேசரி தங்குதுரி பிரகாசம் பந்துலு, திரு.பெஜவாடா கோபால் ரெட்டி, சுவாமி பிரமானந்த் தீர்த்தா ஆகியோர் சிறப்பான சேவை புரிந்துள்ளனர் என்று குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார். தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபை , இந்தி மொழியைப் பரப்பியதுடன், ஏராளமான ஹிந்தி ஆசிரியர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்களை உருவாக்கியதை அறியும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றார்.
ஆந்திரா, தெலங்கானா தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபை தனது 16- வது பட்டமிளிப்பு விழாவைக் கொண்டாடுவதாக கூறிய குடியரசு துணைத்தலைவர், தனது சொந்த மொழியைப் பேசாவரை எந்த நாடும் உண்மையான சுதந்திரத்தை பெற்றதாக கருதமுடியாது என்ற மகாத்மா காந்தியின் கருத்தை நினைவு கூர்ந்தார்.
ஹிந்தி மொழியில் பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரையும் குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார்.
*****
(Release ID: 1511220)
Visitor Counter : 157