நித்தி ஆயோக்
உலக தொழில் முனைவுத்திறன் உச்சி மாநாடு – பிரதமர் நாளை துவக்கி வைக்கிறார்
இந்த மாநாட்டில் பங்குபெறுபவர்களில் 52.5 சதவீதம் பெண்கள்
அமெரிக்க அதிபரின் ஆலோசகர் இவாங்கா டிரம்ப் அமெரிக்க குழுவிற்கு தலைமை ஏற்கிறார்.
Posted On:
27 NOV 2017 2:13PM by PIB Chennai
முதல் முறையாக தெற்கு ஆசியாவில் நடைபெறும் உலகத் தொழில் முனைவுத்திறன் உச்சி மாநாடு நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஐதராபாத்தில் நடைபெறும். அமெரிக்க அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் இந்த மாநாட்டினை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். அமெரிக்க அதிபரின் ஆலோசகர் இவாங்கா டிரம்ப் அமெரிக்கக் குழுவிற்குத் தலைமை ஏற்கிறார்.
எட்டாவது முறை நடைபெறும் உலகத் தொழில் முனைவுத்திறன் உச்சி மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்கின்றனர். “பெண்களுக்கு முதலிடம், அனைவருக்கும் செழிப்பு” என்ற கருப்பொருளை கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில் பெரும்பான்மையான பங்கேற்பாளர்கள், அதாவது 52.5 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.
ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, இஸ்ரேல் உட்பட 10 நாடுகளில் இருந்து அனைத்து மகளிர் பிரமுகர்கள் குழு இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளித்தால், சமூகமும் நாடும் முன்னேறும் என்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் உறுதியாக உள்ளன என்பதையே இந்த மாநாட்டின் கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது.
*****
(Release ID: 1511210)