பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சி.ஐ.சி. –யின் வருடாந்திர மாநாடு – குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம். வெங்கையா நாயுடு டிசம்பர் 6- ஆம் தொடங்கி வைக்க உள்ளார்
நவம்பர் 30 –க்குள் ஆர்.டி.ஐ. அமலாக்கம் தொடர்பான விளக்க காட்சிகளை வழங்க – சி.ஐ.சி. கோரிக்கை
Posted On:
28 NOV 2017 11:35AM by PIB Chennai
மத்திய தகவல் ஆணையம் (சி.ஐ.சி.) தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ற தலைப்பில் 12 –வது வருடாந்திர மாநாட்டை 2017 டிசம்பர் 6 ஆம் தேதி நடத்த அன்று நடக்க உள்ளது. இந்த மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம், வெங்கையா நாயுடு தொடங்கி வைத்து உரையாற்றுவார்.
சி.ஐ.சி கடந்த ஆண்டு தனது ஆண்டு விழாவை நவம்பர் 7 மற்றும் 8 –ம் தேதிகளில் நடத்தியது. இந்த விழா தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 –யை நிறுவியதை முன்னிட்டு நடத்தப்படுகிறது. இதில் நாடு முழுவதும் ஆர்.டி.ஐ சட்டம் சரியாக அமலாக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்கிறது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநில தகவல் ஆணையங்கள் மற்றும் பங்குதாரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆண்டு ஆர்.டி.ஐ சட்டம் – 2005 அமலாக்கம் மற்றும் நிலப்பத்திரங்கள் மற்றும் ஆர்.டி.ஐ. சட்டம் என்ற தலைப்புகளில் மே மற்றும் ஜூலை மாதம் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
கல்வியாளர்கள், பயிற்சி செய்பவர்கள், ஆய்வாளர்கள், அரசுசாரா அமைப்புகள், மாணவர்கள் மற்றும் தொடர்பு உடையவர்கள் “தானாக வெளிப்படுத்துவது (‘Suo-motu disclosures’)“ ஆவணங்கள் கையாளுதல் (‘Record keeping’), ஆர்.டி.ஐ சட்ட அமலாக்கத்தில் எழும் பிரச்சனைகள் (‘Emerging issues in implementation of RTI Act’) ஆகிய தலைப்புகளில் இவர்கள் மேற்கொண்ட நன்றாக ஆய்வு செய்யப்பட்ட அசல் விளக்க காட்சிகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் வரவேற்கப்படுகின்றன.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் விளக்க காட்சிகளை தங்களின் முழு பெயர் மற்றும் தொடர்பு முகவரி குறித்த விவரங்கனை ஆணையத்தின் இணை செயலருக்கு (சட்டம்) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த விளக்க காட்சிகளை jslaw-cic[at]gov[dot]in என்ற மின் அஞ்சலுக்கு “செமினார் ஆன் இம்பிலிமென்ட்டேஷன் ஆஃப் ஆர்.டி.ஐ ஆக்ட் – 2005 என்று தலைப்பிட்டு நவம்பர் 30, 2017 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
*****
(Release ID: 1511102)
Visitor Counter : 66