பிரதமர் அலுவலகம்

எகிப்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் கடும் கண்டனம்

இடுகை இடப்பட்ட நாள்: 24 NOV 2017 10:40PM by PIB Chennai

எகிப்தில் வழிபாட்டு இடம் ஒன்றில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் என்ற பிரதமர், இதில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். எந்த வகை பயங்கரவாதமாக இருந்தாலும் அதற்கு எதிராக போராட எகிப்திற்கு இந்தியா தடையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.

“எகிப்தில் வழிபாட்டு இடத்தில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். அனைத்து வகையான பயங்கரவாத்த்தையும் எதிர்த்து போராட எகிப்திற்கு இந்தியா உறுதியான ஆதரவு அளிக்கும். எகிப்து மக்களுக்கும் எகிப்து அரசுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 

****


(வெளியீட்டு அடையாள எண்: 1510928) வருகையாளர் எண்ணிக்கை : 164
இந்த வெளியீட்டை படிக்க: English , Kannada