மத்திய அமைச்சரவை

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு திருத்தியமைக்கப்பட்ட ஊதியங்கள், பணிக்கொடை, படிகள் மற்றும் ஓய்வூதியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 22 NOV 2017 4:04PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு திருத்தியமைக்கப்பட்ட ஊதியங்கள், பணிக்கொடை, படிகள் மற்றும் ஓய்வூதியத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசுப் பணியாளர்களுக்கு 7வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகள் அமல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இது திருத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளின் சம்பளங்களை வரையறை செய்யக் கூடிய , உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (ஊதியங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958 மற்றும் உயர் நீதிமன்ற (ஊதியங்ங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954 ஆகிய இரு சட்டங்களிலும் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு இந்த ஒப்புதல் வழிவகை செய்கிறது.

ஊதியம் மற்றும் படிகள் போன்றவை உயர்த்தப்படுவதால், உச்ச நீதிமன்றத்தின் 31 நீதிபதிகள் (தலைமை நீதிபதி உள்பட), உயர் நீதிமன்றத்தில் 1079 நீதிபதிகள் (தலைமை நீதிபதிகள் உள்பட) பயன்பெறுவார்கள். இதுதவிர ஓய்வுபெற்ற சுமார் 2500 நீதிபதிகளும் ஓய்வூதியம் / பணிக்கொடை உள்ளிட்டவை திருத்தப்படுவதால் பயன்பெறுவார்கள்.

திருத்தப்பட்ட ஊதியங்கள், பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றின் 01.01.2016 தேதியில் இருந்து கணக்கிடப்பட்டு நிலுவைத் தொகைகள் ஒரே தவணையில் ஒட்டுமொத்தமாக அளிக்கப்படும்.

பின்னணி :

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள், பணிக்கொடை, ஓய்வூதியம், படிகள் போன்றவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (ஊதியங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958  -ஆல் வரையரை செய்யப்படுகின்றன. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள், பணிக்கொடை, ஓய்வூதியம், படிகள் போன்றவை உயர் நீதிமன்ற (ஊதியங்ங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954 என்ற சட்டத்தால் வரையறை செய்யப்படுகிறது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு ஊதியங்கள் / ஓய்வூதியம், பணிக்கொடை, படிகள் போன்றவை  எப்போது திருத்தி அமைக்கப்பட்டாலும் இந்தச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும். எனவே ஊதியங்கள் மற்றும் படிகளை திருத்தி அமைப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்வதற்கு அரசாங்கம் முன்மொழிவு செய்கிறது.

*****



(Release ID: 1510562) Visitor Counter : 167


Read this release in: English , Gujarati