குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட வாரத்தில் நான்கு நாட்களுக்கு அனுமதி

Posted On: 22 NOV 2017 1:46PM by PIB Chennai

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். நாளை நவம்பர் 23, 2017, முதல் வாரத்தில் நான்கு நாட்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையை பொது மக்கள் சுற்றி பார்க்கலாம். வரும் விழயான், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (அரசிதழ் விடுமுறைகள் தவிர) காலை 0900 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொது மக்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை பொது மக்களுக்காக அனுமதிக்கப்படும்.

பார்வையாளர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையின், நுழைவுவாசல் எண் 2  (ராஜ்பத்), நுழைவுவாசல்ம எண் 37(ஹுக்மி மாய் சாலை), நுழைவுவாசல் எண் 38 (சர்ச் ரோட்)   வழியாக சென்று வரலாம். 

பார்வையாளர்கள் http://rashtrapatisachivalaya.gov.in/rbtour என்ற இணை தளத்தில் தங்களின் விவரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.  பார்வையாளர்கள் நபர் ஒருவருக்கு தலா ரூ. 50 பதிவு கட்டணமாக வசூலிக்கப்படும் (எட்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது). இந்திய குடிமக்கள் தங்களின் செல்லத்தக்க புகைப்பட அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும். வெளிநாட்டு பயணிகள் தங்களின் அசல் பாஸ்போர்ட்டை (கடவுசீட்டு) கொண்டு வரவேண்டும்.

மேலும் தகவலுக்கு, பார்வையாளர்கள் மேலாண்மை பிரிவை, தொலைபேசி எண்: 011- 23013287, 23015321 (4662), தொலைநகலி- 011- 23015246, மின்னஞ்சல்  reception-officer@rb.nic.in மூலம் தொடர்பு கொள்ளலாம்.

***



(Release ID: 1510435) Visitor Counter : 255


Read this release in: English , Gujarati